பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

35


கொண்டிருந்தாள். இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வதை அவர்கள் ஏன் தடை செய்யவேண்டும் என்பதைக் கேட்டு விடவேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால் நதாஷா வாசிப்பதை கேட்பதில் தாய்க்கு விரைவில் அலுப்புத் தட்டிவிட்டது. எனவே வந்திருந்த விருந்தாளிகளை. அவர்களோ அல்லது தன் மகனோ அறிந்து கொள்ள முடியாதபடி. கூர்ந்து நோக்கி ஒவ்வொருவரையும் அளந்து பார்த்துத் தனக்குத்தானே மதிப்பிட்டுக் கொண்டிருந்தாள்.


பாவெல் நதாஷாவுக்கு அருகில் அமர்ந்திருந்தான்; அங்கிருந்தவர்களுக்குள் அவனே அழகானவன். நதாஷா குனிந்து வாசித்துக்கொண்டிருந்ததால், அடிக்கடி முன்புறமாக வந்து விழும் தலைமயிரை ஒதுக்கிவிட்டுக்கொண்டிருந்தாள். படிப்பதை நிறுத்திவிட்டு தலையை ஆட்டி. குரலைத் தாழ்த்தி, படித்த விஷயத்தைப்பற்றிய தனது அபிப்பிராயத்தையோ விமர்சனத்தையோ தனக்கு எதிராக இருப்பவர்களை அன்புடன் நோக்கி அவள் சொன்னாள். அந்த ஹஹோல் தனது மார்பை மேஜை விளிம்பின் மீது சாய்த்துக்கொண்டு ஒரக்கண்னால் தான் திருகிவிட்டுக்கொள்ளும் மீசை முனைகளைப் பார்க்க முயன்று கொண்டிருந்தான். நிகலாய் விஸோவ்ஷிகோவ் நாற்காலியின் கம்பு மாதிரி விறைப்பாக நிமிர்ந்த கைகளால் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். மெலிந்த உதடுகள் கொண்ட அவனது அம்மைத் தழும்பு முகம், புருவமின்றி எந்தவித உணர்ச்சி பாவமும் இல்லாமல் ஒரு பொம்மையின் முகத்தைப் போலவே இருந்தது. பித்தளைத் தேநீர்ப் பாத்திரத்தில் தெரியும் தனது முகத்தின் பிரதி பிம்பத்தையே அவன் தன் குறுகிய கண்கள் இமைக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மூச்சு விடுகிறானா இல்லையா என்பதே சந்தேகமாயிருந்தது. சின்னவனான பியோதர் படிப்பதைக் கேட்கும்போது தன் உதடுகளைச் சப்தமற்று அசைத்துக்கொண்டிருந்தான்: புத்தகத்தின் வார்த்தைகளைத் தனக்குத்தானே திரும்பச் சொல்லிக் கொள்வது போலிருந்தது அந்த உதடுகளின் அசைவு. அவனது அடுத்த நண்பன் ஒரேயடியாக் குனிந்து குறுகி, முழங்காவின் மீது - முழங்கையை ஊன்றி, முகத்தை உள்ளங்கைகளில் தாங்கி சிந்தனை வயப்பட்ட சிறு புன்னகையோடு அமர்ந்திருந்தான். பாலெலுடன் வந்த இளைஞர்களில் ஒருவனுக்கு சுருள் சுருளான செம்பட்டை மயிரும், களி துள்ளும் பசிய கண்களும் இருந்தன, நிலைகொள்ளாமல் அமைதியற்று தெரிந்துகொடுத்துக் கொண்டிருந்த அவன் எதையோ சொல்ல விரும்புவதுபோலத் தோன்றியது. இன்னொருவனுக்கு வெளுத்த தலைமயிர்; நன்றாக ஒட்ட