பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

41


"நாங்கள் தப்பாக எதுவுமே செய்யமாட்டோம்”. என்று அவளது கண்களை அசையாமல் பார்த்தவாறு உறுதியாகச் சொன்னான் பாவெல். “ஆனால் நாங்கள் அனைவரும் என்றோ ஒரு நாள் சிறைக்குத்தான் போவோம். நீயும் இதைத் தெரிந்து வைத்துக்கொள்.”

அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன.

“ஆண்டவன் அருள் இருந்தால், நீங்கள் எப்படியாவது தப்பித்து விடுவீர்கள் இல்லையா?” என்று அமுங்கிப்போன குரலில் கேட்டாள்.

“முடியாது’ என்று மெதுவாகச் சொன்னான் அவன்.

“நான் உன்னை ஏமாற்ற விரும்பவில்லை. தப்பிக்கவே முடியாது!.”

அவன் புன்னகை செய்தான்.

“சரி, நீ மிகவும் களைத்திருக்கிறாய். போ. படுக்கப்போ. நல்லிரவு’

பாவெல் சென்ற பிறகு தன்னந்தனியாக நின்ற தாய் ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தாள். ஜன்னலுக்கு லெளியே மூட்டமாய்க் குளிராய் இருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த வீட்டுக் கூரைகளின் மீது படர்ந்துள்ள பனித் துகள்களை ஒரு காற்று விசிறியடித்து வீசியது; அந்த ஊதைக் காற்று சுவர்களில் மோதியறைந்தது, தரையை நோக்கி வீசும்போது கோபாவேசமாய் ஊளையிட்டது; சிதறிக்கிடக்கும் பனிப்படலங்களை தெருவழியே விரட்டியடித்துக்கொண்டு பின் தொடர்ந்தது.

“கருணைபுள்ள கிறிஸ்து பெருமானே, எங்களைக் காப்பாற்று’ என்று அவள் லேசாக முனகிக்கொண்டாள்.

அவளது கண்களில் கண்ணீர்ப் பொங்கியது. தனக்கு வரப்போகும்.. கெடுதியைப் பற்றி அமைதி நிறைந்த தன்னம்பிக்கையோடு சொன்ன பாவெலின் எதிர்காலத்தைப்பற்றிய எண்ணம் இருளிலே. குருட்டுத்தனமாய்ப் பறந்து மோதி விழும் பூச்சியைப்போல, அவளது இயத்துக்குள் குறுகுறுத்தது. அவளது கண் முன்னால் பெரியதொரு பனிவெளி பரந்து கிடப்பதுபோலவும், அந்தப் பனிவெளியில் ஒரு பேய்க்காற்று வேகமாக வீசிச் சுழன்று ஊடுருவிப் பாய்ந்து. கீச்சுக் குரலில் கூச்சலிடுவது போலவும் தோன்றியது. அந்தப் பனிவெளியின் மத்தியிலே ஒரு இளம் பெண்ணின் சிறிய நிழலுருவம் ஆட்டங்கண்டு தடுமாறிக்கொண்டிருந்தது. அந்தச் சுழல்காற்று அவளது பாதங்களின் மீது சுழன்று வீசி, அவளது ஆடையணிகளைப் புடைத்துயரச் செய்தது; ஊசிபோல் குத்தும் பனித்துகள்களை அவளது முகத்தில் வீசியெறிந்தது. அவள் சிரமத்தோடு முன்னேறினாள்: அவளது