பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மக்சீம் கார்க்கி


"அதற்கெல்லாம் நான் ஆள் இல்லை. நானே ஒரு கிழம்: மேலும் எனக்கு எழுத்து வாசனை கிடையாது.....” என்று துக்கம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டே தரையை விட்டு எழுந்தாள் தாய்....

......... பாவெல் அடிக்கடி பேசினான். அதிகநேரம் பேசினான்; அழுத்தத்தோடு பேசினான்மூமூநாளுக்கு நாள் மெலிந்து வந்தான். ஆனால் அவன் நதாஷாவைப் பார்க்கும் போதும், அவளோடு பேசும்போதும் அவனது கண்களிலுள்ள கடுமையான பார்வை மறைந்து மென்மையாய் ஒளிர்வது போலவும், குரலில் இனிமை நிறைந்து ஒலிப்பது போலவும், அவன் எளிமையே உருவாய் இருப்பது போலவும் தாயின் மனதில் பட்டது.

“கடவுள் அருளட்டும்!” என்று அவள் நினைத்துக்கொண்டாள். தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

அவர்களுக்குள் எழும் வாதப் பிரதிவாதங்கள் கொதிப்பேறி, வீராவேசம் பெறும்போதெல்லாம், அந்த ஹஹோல் தன் இடத்தைவிட்டு எழுந்து நின்று, உடம்பை ஒரு கண்டா மணியின் நாக்கைப்போல் முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு ஏதோ சில அன்பான, சாதாரணமான வார்த்தைகளைச் சொல்லுவாளன்: உடனே எல்லாரும் அமைதியாய்விடுவார்கள். அந்த நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மட்டும் மற்றவர்களை ஏதாவது செய்யும்படி கடுகடுப்பாய்த் தூண்டிவிட்டுக்கொண்டேயிருப்பான். அவனும், அந்தச் செம்பட்டைத் தலையனும்தான் செம்பட்டைத் தலையனை அவர்கள் சமோய்லவ் என அழைத்தார்கள்) சகல வாதப் பிரதிவாதங்களையும் ஆரம்பித்து வைப்பார்கள். சோப்புக் காரத்தில் முக்கியெடுத்ததைப் போன்ற தோற்றமும், உருண்டைத் தலையும் கொண்ட இவான் புகின் என்பவன் அவர்களை ஆதரித்துப் பேசுவான். வழிய வழியத் தலைவாரி விட்டிருக்கும் யாகவ் சோமவ் அதிகம் பேசுவதில்லை. பேசினால் அழுத்தம் திருத்தமாய்ப் பேசுவான். அவனும். அகல நெற்றிக்காரனான பியோதர் மாசின் என்பவனும் பாவெலையும் ஹஹோலையும் ஆதரித்துப் பேசுவார்கள்.

சில சமயங்களில் நதாஷாவுக்குப் பதிலாக, நிகலாய் இவானவிச் என்பவன் வந்து சேருவான். அவன் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பான். வெளுத்த இளந்தாடியும் அவனுக்கு உண்டு. அவன் எங்கேயோ ஒரு தூரப்பிரதேச மாகாணத்தில் பிறந்தவன்; “ஓ” என்ற ஓசை அவன் பேச்சில் அதிகம் ஒலித்தது. பொதுவில். அவன் ஒரு தொலைவானவனாகவே தோன்றினான். அவன் சர்வ சாதாரண விஷயங்களையே பேசினான் — குடும்ப வாழ்க்கை, குழந்தைகள்,