பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

75


அவனது பேச்சு அமைதியாகவும் அழுத்தமாகவும் ஒலித்தது. பேசும்போது அவன் தனது கரிய கரத்தால் தாடியை வருடிவிட்டுக்கொண்டே, பாவெலின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

“ஊரில் உன்னைப்பற்றி எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். உதாரணமாக, என் எஜமான் உன்னை ஒரு மதத் துரோகி என்கிறார். நீ தான் தேவாலயத்துக்கே போவதில்லையே, நானும் போகவில்லை பிறகு அந்தப் பிரசுரங்கள் வந்து சேர்ந்தன. அதுவும் உன் வேலையா?”

“ஆமாம்” என்றான் பாவெல்.

“நீ என்ன சொல்கிறாய்?” என்று சமையலறையிலிருந்தவாறு தலையை நீட்டிக்கொண்டு வந்து கேட்டாள் அவனது தாய், “அதை நீ மட்டுமே செய்யவில்லை!”

பாவெல் சிரித்தான்; ரீபினும் சிரித்தான்.

“ரொம்ப சரி” என்றான் ரீபின்.

தனது வார்த்தைகளை அவர்கள் மதியாததைக் கண்டு மனம் புண்பட்ட மாதிரி சிணுங்கிக்கொண்டு உள்ளே போய்விட்டாள் தாய்.

“அந்தப் பிரசுரங்கள் இருக்கிறதே, ‘அருமையான வேலை. மக்களைத் தூண்டிவிட்டுவிட்டன. மொத்தம் பத்தொன்பது இல்லை?”

“ஆமாம்” என்றான் பாவெல்.

“அப்படியென்றால் நான் அத்தனையையும் படித்துவிட்டேன். அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவாக இல்லை; சில தேவையில்லாதவை. ஆனால், எவ்வளவோ விஷயங்களை ஒரு மனிதன் சொல்ல வேண்டியிருக்கும்போது இப்படி ஒன்றிரண்டு தப்பிப்போவது சகஜம்தான்.”

ரீபின் தனது வெள்ளைப் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் புன்னகை செய்தான்.

பிறகு தான் சோதனை நடந்தது. அதுதான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நீயும் அந்த ஹஹோலும் நிகலாயும் நீங்கள் எல்லாரும்........”

சொல்வதற்குச் சரியான வார்த்தை வாய்க்கு வராமல், அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்; மேஜை மீது கைவிரல்களால் தாளம் கொட்டினான்.

“நீங்கள் எல்லாரும் உங்கள் உறுதியைக் காட்டிவிட்டீர்கள்மூமூஓ, பெரியவர்களே, உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். நாங்கள் எங்கள் வழியில் போகிறோம் என்று சொல்வது மாதிரி இருந்தது. அந்த