பக்கம்:தாய் மண்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0

கூடத்தில் மேஜைமீதிருந்த முகம் பார்க்கும் கண்ணுடி அவளை நோக்கி, டீச்சர், டீச்சர்!’ என்று விளித்தது. அவளுடைய கண்ணுடிக்கு மட்டும் பேசத் தெரியும். அதன் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கவும் அவளுக்குத் தெரியும். ஆடிகை அண்டினள். முகம் பொருத்தி முகம் பார்த்தாள். கண் தொடுத்துக் கண் எடுத்தாள். கண்ணியமான கவர்ச்சி கண் பொத்தி விளையாடியது. மொக்கினுள்ளே தவம் இயற்றும் மணம் போன்று, அவளுள் அந்தரங்கமான பெருமிதம் மொக்கின் மனமாகத் தவம் இயற்றியது.

அடுக்களைக்குள் சென்றான், அவள். மூடி வைத்திருந்த இட்லிகளைச் சாப்பிட்டாள். பிளாஸ்கிலிருந்த காப்பியை அளவாக ஊற்றிச் சுவைத்தாள். பாத்திரம் பண்டங்களைச் சுத்தம் செய்தாள். கொல்லப்புறத்துக்குத் தாழ் அமர்த்தித் திரும்பிஞன். கொடியில் உலரப் போட்ட துணிகள் மத்தியான்னத்துக்குக் காய்ந்துவிடும். வெயில்தான் நன்றாகக் காய்கிறதே! கஞ்சிப்பொழுதுக்குப் பள்ளி முடித்துத் திரும்ப உதவும் சோற்றுப் பானையை மூடி வைத்தாள். கறி குழம்புக்கு அடக்கம் மிகுதி.

கடத்துக்கு வந்தாள், தமிழரசி, ஊதுவத்திச் சாம்பலைக் காகிதத்தில் தாங்கி மேஜையின் அடியில் இருந்த கூடையில் கொட்டினுள். அந்தச் சாம்பலில் பொதிந்திருந்த மகத்தான தியாகத்தை அவள் எப்போதும் நினைத்துக் கொள்வாள். அது அவள் பொழுதுபோக்கா? அல்ல. அது அவளது . உதிரத்துடன் உதிரமாக உறவாடிக் கிடந்த கடமைப் பண்பாட்டின் உயிர்ப்பு: மூச்சு:- அப்படித்தான் அவள் தன்னுள் அடக்கமாக அடக்கிக் கொள்ளுவாள். அவள் பழக்கம் அப்படி: ...

புதிய செய்தித்தாள் விரிந்தது.

சண்டீகரில் பவில்கா பகுதியில், பஞ்சாப் ஆயுதப் போலீஸ் சாவடி ஒன்றைப் பாகிஸ்தானித் துருப்புகளின் வசமிருந்து நம் இந்தியத் தற்காப்பு வீரர்கள் மீட்டுவிட்டார் 6FFTi

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/10&oldid=663901" இலிருந்து மீள்விக்கப்பட்டது