பக்கம்:தாய் மண்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இத்தகைய துர்ப்பாக்கியத்தை எனக்கு ஆணையாக எல்லை காட்டிவிட்ட அந்த விதிக்கு - அந்த வினைக்கு - அந்தத் தெய்வத்துக்கு நான் பயப்படத்தான் வேண்டுமா?...... -ஊஹாம்! நான் பயப்பட வேண்டாம்! நான் பயப்படவும்

முடியாது!...”

அகப் பேய் தலைவிரித்து ஆட்டம் போட்டது!

சிருஷ்டிப் புதிர், தத்துவமாக ஆனது!

தன்னை அனுதை என்று ஏசிய பேச்சைத் தாங்கமுடி யாமல் கிணற்றில் விழுந்து இறந்துபோகத் துணிந்த பள்ளிச் சிறுமி முத்தழகிதான் அவளது நெஞ்சிலும் நினைவிலுமாக நீக்கமற நின்றாள். ஆல்ை, அந்த அைைதச் சிறுமி முத்தழகியை அவள் தேடிப் பிடித்துப் படித்துக் கொடுத்த சீரிய வாழ்வுப் போதனைகள் அவள் நெஞ்சிலும் நினைவிலும் நிற்கவில்லை!

மத்தியான்னப் பள்ளிக்கூடத்தை முடித்துக்கொண்டு தமிழரசி வீட்டுக்கு வரும்போது வாங்கி வந்த தூக்கமாத் திரை’கள் நான்கை எடுத்துப் பிரித்து வைத்தாள். நெஞ்சிலும் மூளேயிலும் ஏறியிருக்கும் பெரும்பாரம் இன்னும் சிறுநேரத் திற்கெல்லாம் இறங்கிவிடும். அவள் அவ்வெண்ணத்தால் அமைதிகொண்டாள். அத்தகையதோர் ஆறுதல் தேவைப் பட்டதாகவும் அவள் கருதினுள்.

“வரையோட்டுக்கும் ஆகாது இனி இந்த மண்பாண்டம்!” -இந்நினைவே அவளுக்கு ஒரு விடுதலையாகவும், அவ்விடு தலையே ஒரு சிரிப்பாகவும் அவளுள் மதிப்புப் பெற்றன. சிரித்தாள்!...

கன்னியின் பேய்ச் சிரிப்பும், இருட்டின் பேய்ச் சிரிப்பும் முயங்கின.

விளக்கின் விசையை இயக்கினுள். வெளிச்சம் பரவியது.

டைரியை எடுத்து வைத்துக்கொண்டு எழுதினுள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/100&oldid=663902" இலிருந்து மீள்விக்கப்பட்டது