பக்கம்:தாய் மண்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

“என் பெயரில் விழுந்து விட்ட பழியைக் சுமக்கும் மனப் பக்குவம் இப்போது என்னைக் கைவிட்டு விட்டது. என்னு டைய கோழைத்தனம் என் மனத்திலிருந்த பிறக்கவில்லை. அது, என்னைப்பெற்ற புண்ணிய சீலர்களின் கோழைத்தனத்தி லிருந்து பாரம்பரிய உரியையுடன் என்னை ஒட்டியிருக்கிறது. என்னவெல்லாமோ கனவு கண்டேன்!... என் பிறவிக்கும் ஒர் அர்த்தத்தை உண்டாக்கிக் கொண்டுவிடலாம் என்று தான் வைராக்கியம் பூண்டிருந்தேன். இறுதியில், எல்லாமே பகற்கனவாகிவிட்டன. என்னே விதியும் வினையும் தெய்வ மும் சோதித்துவிட்டன. நான் இனி ஏன் வாழ வேண்டும்?... யாருக்காக நான் வாழ வேண்டும்?...”

அதற்கு மேற்கொண்டு அவள் மனம் மரத்தது; செயற் பட மறுத்தது. எரிந்து கொண்டிருந்த ஊதுவத்தியின் நறு மணம் அவள் உள்ளத்தைக் கவர்ந்திழுத்தது. ஊதுவத்தி யையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் பாதத்தில் சிதறியிருந்த சாம்பல் தூள்களிடத்தும் அவள் கண்பார்வை செலுத்தினுள். முன்பெல்லாம், அவள் இந்தச் சாம்பல் தூள்களைப் பக்தி சிரத்தையுடன் மதித்து வந்த ஞாபகமே இப்போது இற்றுப் போனதாகவே அவள் கருதினுள். இல்லையென்றால், அவற்றை எற்றி விடுவாளா?

தூக்க மாத்திரைகளைத் தெரிந்த கடையில் வாங்குவதற் குள் எவ்வளவு பாடு பட்டு விட்டாள்! அவற்றைக் கையில் எடுத்தாள். இதய பூர்வமான தூய மலர்ச் சிரிப்பைக் கடைசித் தடவையாக அவ்வறையில் சிதறச் செய்தவளாக, அவள் அம்மாத்திரைகளை-இட்டுக் கட்டிச் சொன்ன பொய் யின் உதவியுடன் பெற்ற அந்த மாத்திரைகளைச் சலன மின்றி, விழி பூக்கப் பார்த்தாள். அவை தும்பைப்பூ நிறத்தில் எத்துணை கவர்ச்சியாக மின்னின!... பொய்க்கு மினுக்கத் தெரியாதா, என்ன!...

“என் மரணத்திற்கு நானேதான் காரணம்!’ என்று எழுதி அடியில் கையொப்பம் செய்திருந்த தாள் காற்றுடன் மல்லுக்கு நின்றது. இனிஷியல் இல்லாத-தந்தையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/101&oldid=663903" இலிருந்து மீள்விக்கப்பட்டது