பக்கம்:தாய் மண்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 02

.ெ ப ய ரு க் கு ரி ய தலைப்பெழுத்து இல்லாத - வெறும் கையெழுத்து!-இது செல்லத்தக்கதா?

“நான் இறந்தபின் எனக்காக வருந்துபவர்கள் யார் இருக்கிருங்கள்?’ என்று அவள் தன்னையே கேட்டுக் கொண் டாள். இல்லத்தின் தலைவி தலைமையாகத் தோன்றினுள். உணர்ச்சிப் பிழம்பாக எழுந்து, அம்மையாரின் படத்தின் பாதத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தாள். “அம்மா!... உங்கள் அன்பு மகத்தானது. அவ்வன்புக்குக் கைம்மாருக என் கடமையைச் செய்யக் கொடுத்து வைக்க வில்லை நான். இது என் பிழையன்று. விதியின் பிழை அம்மா, இது!... அம்மா!... தெய்வத்தை நான் கண்டதில்லை. ஆனல், உங்களே எனக்குக் காட்டி விட்டது தெய்வம்! நீங்கள் என் தெய்வம்! என்னை நான் இழந்துவிட்டேன். அதனுல்தான், உங்களைக் கடைசி முறையாகத் தரிசிக்கும் நல்லதிர்ஷ்டத்தைக் கூட இழந்துவிட்டேன், நான். உங்களைப் போன்ற அபூர்வப் பிறவிகளைப் பகவான் வெகு அபூர்வ மாகவே படைத்தளித்திருக்கிருன்!... அம்மா!... அம்மா!...” அவள் தலைவிக்குக் கையுயர்த்தி அஞ்சலி செலுத்தினுள். அவள் அடிமணம், அம்மா! அம்மா!’ என்று ஓலமிட்டது. அந்த ஒலத்தில், தன்னை ஈன்ற அம்மாவின் நினைவைக் கலந்தாள். அம்மையுடன் அப்பனையும் இணைத்து அழைத் தாள். முகம் அறியாத அவ்விருவருக்கும் வணக்கம் தெரிவித் தாள்.

நெஞ்சின் வைராக்கியப் பொலிவு அவள் கண்களைத் துலாம்பரமாக வைத்துக் கொண்டன.

தன் முடிவை அறிந்து, தனக்காக வருந்தும் அடுத்த உள்ளத்தை அவள் வேண்டியபோது, வீரத்தியாகி மோகன்தாஸ் ஆஜர் சொல்லிப் பெயர் கொடுத்தான். ஒரு மணி நேரத்திற்குமுன், இருட்டில் உழன்று கொண்டிருக் கையில், அவன் ஊன்று கோல்களின் ஒத்தாசையுடன் தன்னைத் தேடிக்கொண்டு வந்து, ‘எப்பவும் வழக்கமாக வருகிறதுபோல வருவீங்களே? ஏன் வரலை? உடம்புக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/102&oldid=663904" இலிருந்து மீள்விக்கப்பட்டது