பக்கம்:தாய் மண்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

அகமில்லிங்களா, தமிழரசி’ என்று பவ்யமாகப் பரிவைக் குழைத்துக் கேட்டுச் சென்ற அவனது பவித்திரமான உள்ளத் துக்கு அஞ்சலி செலுத்தினுள்.

அவளைச் சாரல் அணைத்தது. உடலில் சிலிர்ப்புப் பரவியது. து.ாக்கமாத்திரைகளைக் கையில் கொட்டினள். அவற்றை வாய்க்கருகில் கொண்டுபோளுள். அம்மாத்திரைகளைச் சுவைக்கத் துடித்த நாக்கின் பசி இனி அடங்கிவிடும்!

ஒரு மாத்திரை உள்ளே விழுந்ததுதான் தாமதம், அவள் புதிதாகப் பிறப்பெடுத்த பாங்கிலே, கண்களை விழித்து விழித்துப் பார்த்தாள்; இதழ்களேப் பிரித்துப் பிரித்துச் சிரித் தாள். கையிலிருந்த மீதி மாத்திரைகளைத் தரையில் வீசி ள்ை. ‘என்ன அதிசயம்!... நான் இத்துணை நேரம் கோழைப் பெண்ணுகவா இருந்துவிட்டேன்? என் பிறப்புக்குப் பொரு வரில்லாமல் செய்துவிட வேண்டுமென்று திட்டமிட்ட என் தாய் தந்தையர்களுக்கு-அவர்களது இருதயமிழந்த போக் குக்குச் சாவல் விட்டு என் வைராக்கியத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வேன். என் பிறப்புக்கு அர்த்தம் உண்டாக்கி வாழ்ந்து காட்டுவேன்!... என்னை அைைதயாக்கிய என் பெற்றாேர் உயிருடன் இருந்தால்- அவர்களைக் கடவுள் எனக் குக் காட்டினல் அவர்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுப் பேன். தகப்பன்சாமிதான் எனக்கு இவ்வுபகாரத்தைச் செய்ய வேண்டும்!... பேய் ஒருத்தி ஏசிள்ை என்பதற்காக, தானும் பேயாகி இத்தனை நாழிகைப் பொழுதுக்கு ஜீவ மரணப் போர் நிகழ்த்தி இருக்கிறேனே!... “உனக்கு நீயே வழிகாட்டி’ என்று புனிதவள்ளல் போதித்தார். அதன்படி, எனக்கு நானே வழிகாட்டியாயிருந்தால் இந்நேரம் நான் செத்த இடம் புல் முனைத்திருக்காதா? வாழப் பிறந்த தான்-வாழக் கடமைப்பட்ட நான் எப்படிக் கோழை ஆனேனே? ஏன் கோழை ஆனேனே?... என் பின் புத்தி எனக்கு மாளாத பழியை எழுதி வைத்து விட்டு மறைந்து விட இருந்ததே!... சே!... வெட்கம்... வெட்கம்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/103&oldid=663905" இலிருந்து மீள்விக்கப்பட்டது