பக்கம்:தாய் மண்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இடது கன்னத்தில் இருந்த மச்சத்தை அன்புதோய வருடியபடி தமிழரசி கண்ணுடிக்கு முன்பாகப் போய் நின்றாள். பேயை ஒட்டிய பின், முகத்தில் களை திகழக் கேட்க வேண்டுமா?... ‘அம்மா!... தாயே!... என் தெய்வமே!’ என்று இல்லத் தாயின் படத்துக்கு நேராக ஒடிப் போய் மீண்டும் விழுந்து எழுந்தாள், ஆனந்தக் கண்ணிர் ஊற்றுக் கண் திறந்தது.

“என் பாவத்தைத் தடுத்தாட்கொண்ட அந்தப் புண்ணி யுத்துக்குப் பேர் என்ன சொல்லி அழைப்பது? விதியா? வினையா? இல்லை, தெய்வமா?...”

‘முடியா மறையின் முடிவு” ஆன தெய்வத்தைத் தன் வயப்படுத்த அவளுக்குக் கண்ணிர் கை கொடுத்தது.

அப்பொழுது, கதவு தட்டப்படும் ஓசை காதுகளைத் துளைத்தது.

தமிழரசி இருட்டில் பளிச்சிடும் குங்குமப் புள்ளியாக வாசலுக்கு வந்தாள்.

மோகன்தாஸ் மோகனப் புன்னகைக் கோலம் சிந்திக் காட்சி தந்தான். ‘ஒன்றுமில்லீங்க! கெட்ட சொப்பனம் கண்டேன். அதுதான் பயந்துபோய் எழும்பி உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு இப்பவும் ஓடி வந்தேன்!... உங்களுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லீங்களே?...’ என்று படபடப்பு மிளிர பதட்டத்துடன் கேட்டுக்கொண்டு உள்ளே ஊன்று தடிகளை நுழைத்துப் பிரவேசித்தான் அவன்.

‘எனக்கு உடம்பு நல்ல சுகமாயிருக்குதுங்க’’ என்று சொல்லியபடி அவனை வரவேற்றாள் தமிழரசி. ஆல்ை, அவள் கண்கள் மயங்கிச் சுழலத் தொடங்கியதைக் கண்டு மோகன் தாஸ் பதறித் துடித்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/104&oldid=663906" இலிருந்து மீள்விக்கப்பட்டது