பக்கம்:தாய் மண்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்கொடைகள்

பன்னிரண்டு

மந்தாரம் போட்டிருந்த வானத்தில் செங்கதிர்ச் செல்வன் வெள்ளோட்டம் வந்தால், வானம் மப்புக் கலைந்து எத்துணை குது.ாகலமாக விளங்கும்?-அப்படித்தான் இருந்தது மோகன்தாஸின் நிலையும். தமிழரசி அழகு மலர்க்கண்களைக் கண்டதும்தான் அவனுடைய செவ்வல்லிச்சீர் இதழ்கள் திறந்தன.

எந்தக் கணத்திலும் வந்து மோதக் காத்திருக்கும் எந்த விதமான ஆபத்துச் சோதனைகளையும் தீரமுடன் எதிர்க்க மனத்தைரியத்துடன் காத்திருக்கப் பழகிப் பக்குவப்பட்ட அவ்வீரன், சில விடிைகளுக்குள் எப்படித் தவித்துப் போய் விட்டான்! -

யுகப்பிரளயத்தின் பிடியை விட்டுத் தப்பிப் பிழைத்தாற். போன்று, யுக தர்மத்தின் நீதி மோன உருவெடுத்துக் காலத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

கண்கள் மயங்கிச் சுழல, தமிழரசி தரையில் சுருண்டு விழுந்ததைக் கண்டதும் அவன் இன்னது செய்வது என்று புரியாமல் தடுமாறினன். எந்த உதவியையும் செய்யக் கூடாத நிலையில் அவன் இருந்தான். எந்த உதவியையும் ஏற்கக்கூடாத நிலையில் அவள் இருந்தாள். உடனே, ஊன்று கோல்களை விரைவுடன் நகர்த்திக்கொண்டு வெளிப்புறம் வந்து தன் தங்கையை அழைத்தான். அந்தப் பெண் சீதை ஒட்டமாக ஓடி வந்தாள். அண்டை அயல் என்று அன்பு செய்து பழகியவர்கள்-இரக்கத்தை ஒரு விலங்காகக் கொள் ளாமல், மனிதாபிமானமாகக் கொண்டு ஒழுகப் பக்குவம் பட்டவர்கள்-பாசம் காட்டுவதற்குக் கூலி கேட்கத் துணிவில் லாதவர்கள் என்ற வகையில் ஆணும் பெண்ணுமாக ஒரு சிலர் கூட்டம் கூடினர்.

தா. ம. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/105&oldid=663907" இலிருந்து மீள்விக்கப்பட்டது