பக்கம்:தாய் மண்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

முகத்தில் ஈரத்துணி பிழியப்பட்டது. உபசாந்தியாகக் குளுகோஸ் தண்ணிர் செலுத்தப் பட்டது.

கங்குல் கன்னிக்கு வாழ்த்துப் பாடிக் கொண்டிருந்தனர், வானத்து நட்சத்திரத் தோழிகள்.

அன்பு செய்த ஒற்றைக்கால் தவத்தினுல், கருணை கண் திறந்தது. தமிழரசியும் கண் திறந்தாள். மெத்தையில் எழுந்து அமர்ந்தாள்.

மோகன்தாஸ், ‘தமிழரசி!...” என்று உந்திக் கமலத்தி லிருந்து தோய்த்தெடுத்த நிறைவான பா ச த் தா ல் அழைத்தான்.

சூழ இருந்தவர்களின் மலர்ந்த முகங்களைப் பார்த்தாள் தமிழரசி, எனக்கு என்ன நேர்ந்தது?’ என்ற பாவனையைப் பார்வையில் தேக்கிள்ை. மோகன்தாஸைப் பார்த்து, “என்ன நடந்தது?’ என்று குறிப்பாகக் கேட்டாள்.

அவன் சொன்னன், அவள் திடீரென்று மயங்கி விழுந்ததைப் பற்றி.

அவளுக்கு நடப்பு உணர்வுடன் ஓடி வந்தது-மனத்தில். அவள் தேடி எடுத்தாள், சிதறிக் கிடந்த தூக்க மாத்திரைகளே. வாய்க்குள் போய்விட்ட ஒரு தூக்க மாத்திரையின் விளைவினல் வந்த கோளாறு இது என்பது அவளுக்குத் தெளிவாயிற்று. ஆலுைம் விழுங்கிய அந்த ஒரு தூக்கமாத்திரை எப்படித்தான் அவளது கோழைத்தனத் தையும் விழுங்கியதோ என்பது அவளுக்குப் புதிராகவே தோன்றிக் கொண்டிருந்தது.

‘தூக்க மாத்திரைகள்தானே இவை?’’

    • th... [**

“உங்களுக்கு இவை ஏன் தேவைப்பட்டன?’’

மனம் சிறுபொழுது சலனம் அடைந்தது. அதன் சாந்திக்கு இவை தேவைப்பட்டன!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/106&oldid=663908" இலிருந்து மீள்விக்கப்பட்டது