பக்கம்:தாய் மண்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

“அப்படியென்றால்?...’

“பயப்படாதீர்கள். தெய்வம் எனக்கு ஒரு சோதனை வைத்தது. நான் பதிலுக்குத் தெய்வத்திற்கு ஒரு சோதனை வைத்தேன்! என்னுல் தெய்வத்தை வெல்ல முடியுமா?முடியவில்லே!... என் மனம் முற்றாத குறைதான் என் தோல்விக்குக் காரணம். நான் தெய்வத்தைச் சோதிக்கத் துணிந்ததற்கும் அதுவேதான் காரணம்: புரியவில்லையா?.

“என்னுடைய பிறப்புக்குச் சாட்சி சொல்ல அஞ்சி, என்னை அளுதையாக ஆக்கி, என் பிறப்பையே ஒரு பழியாகஒரு ஊனமாக-ஒரு கறையாகச் செய்த புண்ணிய"த்தைச் சுமந்துகொண்டு ஓடிவிட்ட என் பெற்றாேர்களின் பழி என் பேரில் சுமந்தது. தெய்வம் அல்லது விதி, அல்லது வினை செய்த அநீதிக்கு என்னைச் சாடினுள் ஒருத்தி. பலர் மத்தியில் ஸ்கூலில் என் சக ஆசிரியை என்னே ஏசினுள். திலே கலங்காத நான், நிலை கலங்கினேன். என் அகப்பேய் கட்டறுத்துக் கொண்டது. பின், கேட்கவேண்டுமா? இந்த மாத்திரைகளைச் சரணடைந்தேன். முதல் மாத்திரையை விழுங்கினேன். எஞ்சியிருந்த மாத்திரைகள் என் உயிரை விழுங்கக் காத்திருந்தன. அதற்குள், முதல் மாத்திரை என் உடலைத் தொட்டு, என் உள்ளத்தைத் தெய்வ வசத்தால் தொட்டதும் என் அகத்தைத் தொட்டு நின்ற பேய் ஓட்டமெடுத்தது. நான் விழுங்கிய மாத்திரையில் தெய்வம் வாசம் செய்திருக்க வேண்டும்! மீண்டும் நான் பிறந்திருக்கிறேன்! புதிதாகப் பிறப்பெடுத்திருக்கிறேன் நான்!’ -

அவள் பான்மையுடன் சிரித்தாள். விதிக்கு மாத்திரம்தான் சிரிக்கத் தெரியுமா, என்ன?தமிழரசி சாவின் தலைவாசலைத் தட்டிவிட்டு, மீண்டும் வாழ்வின் தோரண வாயிலைத் தொட்டிருப்பதாகவே அனைவரும் நம்பினர். . . .”

சீதை ஆதரவாகத் தமிழரசியின் கேசங்களைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தமிழரசி உதிர்த்த சொற்களைக் கேட்டதும் உணர்ச்சி பெருகி, பெருகி வந்த சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/107&oldid=663909" இலிருந்து மீள்விக்கப்பட்டது