பக்கம்:தாய் மண்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

நீரை மறைக்கத் தன் இமைகளைத் தடவி விட்டுக்கொள்ள

மறக்கவில்லை.

“நான் உன் கையிலே சொல்லிக்கிணு இருக்கலே. அது போல வாத்தியாரம்மா பொழைச்சுட்டாங்க, பாரு!’ என்றாள் பெண் ஒருத்தி-தன்னேக் கொண்டவனிடம். அவன்

- - * : __ _& ! - கைதான் அவனுக்குக் காது போலிருக்கிறது!...

வந்தவர்கள் தமிழரசியின் அன்புக்குப் பாத்திரமாகிச் சென்றனர்.

‘இன்றையச் சலனமும் சாந்தியும் என் வாழ்வில் மறக்க முடியாத திரும்புமுனைப் பகுதிகள்தாம். அட்டியில்லை. எனக்கு நானே புடம் வைத்துக் கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்த்து. பொன்னை சந்தர்ப்பம். இனி நாளுகச் சாவைத் தியானிக்க வேண்டிய இக்கட்டு ஏற்படா தென்றே நினைக்கிறேன். முகில் வானம் மழை பொழிந்து முடித்தது. மனம் வெளுத்துவிட்டது. இனி என் கடமை ஒன்றுதான் அதி முக்கியமாகச் செயல் வடிவு பெற்றாக வேண்டும். நான் பிறப்பெடுத்த கடமைக்குப் பயனுள்ள ஒர் அர்த்தத்தை என்னல் கொடுக்க முடிந்தால், அப்போது என் மனம் மிகுந்த ஆறுதலும் சந்தோஷமும் அடைய முடியும் இந்த நற்பயனுக்குத் தெய்வம்தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும். நான் அபலை; அஞதை. கேவலம் மானுடப் பெண். எனக்கு என்ன தெரியும்?”

நாட்குறிப்புக்கென்று உருவான சிந்தனைகள் இவை. சீதையும் புறப்பட்டாள். - நெஞ்சுக்கும் நினைப்புக்கும் சுகம் தரும் முறையில், சிந்தனைகள் முறை பயின்று தோன்றின. அந்தச் சுகத் தெளிவின் பூரணத்தோடு அவள் மோகன் தாலைக் கூர்ந்து கவனித்தாள். தன்னைப் போலவே அவன் தன்னேக் கூர்ந்து கவனிப்பதைப் புரிந்து கொண்டாள். நையாண்டி செய்த ஜலஜாவின் முன்னே தீயாக உருவெடுத்து ரத்தம் துடிக்கப் பேசிய பேச்சின் முடிவில், இத்தனை சிறு வயதில் நான் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/108&oldid=663910" இலிருந்து மீள்விக்கப்பட்டது