பக்கம்:தாய் மண்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

தமிழரசி அற்புதம்! என்று சொல்லி மகிழ்ந்தாள்.

பாகிஸ்தானின் நட்பற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி, நாட்டின் தற்காப்புக்குத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டி, காங்கிரஸ் பார்விமெண்டரி கட்சியில் ஆகஸ்ட் பதி ஒன்கில் பாரதப் பிரதமர் டேசிய பேச்சு அவளுடைய நெஞ்சைத் தொட்டுக் கொண்டேயிருந்தது.

மக்களுக்கு ராஷ்டிரகதி அருளிய சுதந்திர தினச் செய்தி களிலே, மாணவர்கள் ஒழுக்கத்தோடும் சீலத்தோடும் நடந்து கொள்ள வேண்டுமென்றும், நாட்டு மக்கள் லட்சியங்களில் நம்பிக்கையுடனும் நாட்டு நலனில் உறுதியுடனும் தீரத்துடன் கடமை புரிய வேண்டுமென்றும், தியாக உணர்வே சிறந்த தற்காப்பு என்றும் உரைத்த ஆழ்ந்த சிந்தனைத் தத்துவங்களை அவள் ஆன்மநேயத்தோடு நித்தம் நித்தம் எண்ணிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

‘நன்றாகப் பாடிஐன் பாரதி எல்வளவு தீர்க்க தரிசனத் தோடு, எவ்வளவு முன்னறிவிப்புக்களை நமக்குக் கொடுத்திருக் கிருன் ... குருடனுக்குக் குருடன் வழி காட்டினுளும்: இப்போது அப்படித்தான் உலக வியவகாரம் நடக்கிறது. சீனுக்காரன் நம்மிடம் பட்டயாடுகளைப் பார்த்திருந்தும், இந்தப் பாகிஸ்தானியர் இப்படிக் குருட்டுத்தனமாக நடக்கத் துணிவார்களா? இவர்களுக்குக் கண் மட்டும் குருடல்லது இதயமும் குருடு.ே அதனுல்தான், போர் ஒய்வு ஒப்பந் தத்தை அவர்களால் மீறத் துணிவு ஏற்பட்டிருக்கிறது. பாவம், பாகிஸ்தான் நம் வணக்கத்துக்குரிய வீர ஜவான் களிடம் இந்தப் பாகிஸ்தானியர் பட்டபாடுகளை உலகம் எப்போதும், மதக்கவே மறக்காது! நம் தர்மம் நம்மைத் காக்கும். அறத்தை அன்டை, பண்பை, சத்தியத்தைத் தொழுபவர்கள் நாம். ‘தர்மத்தின் வாழ்வதனச் குது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்’ என்ற அர்ஜுனன் வாய்மொழி - பாரதியின் உண்மை நம்மை என்றென்றும் வாழ்த்தும்!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/11&oldid=663912" இலிருந்து மீள்விக்கப்பட்டது