பக்கம்:தாய் மண்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

“நீங்க ஒரு குழந்தை! என்னையும் ஒரு குழந்தையாய் ஆக்கிட்டீங்க!” -

அவள் நாணப் பூத்துரவி, மென் சிரிப்பில் பொன் துரவி, இதழ்க் கரைகளை உடைத்தாள்.

அவன் அந்தப் பூந்தளிர்ச் சிரிப்பில் சொர்க்கத்தைத் தரிசித்தான்.

அவள் மூச்சை வாங்கி மூச்சை வெளியேற்றினுள்.

அவனுடைய கால்கள் அவள் நெஞ்சில் கால் பரவின!.

சிறு பொழுது அவர்களுக்கு மத்தியில் அமைதி இருந்தது.

அப்போது சீதை உணவு கொண்டு வந்தாள். அன்பைத் தட்டவில்லை, தமிழரசி, அவள் வெட்கப்படாமல் சாப்பிட் டாள். அவன் உத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தான். புது டில்லியில் ராஜாஜி-சாஸ்திரி சந்திப்பைப் புகைப் படங்கள் காட்டிக் கொண்டிருந்தன. அந்தப் படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்தாஸ். அவன் பத்திரிகையை மடித்து வைத்தான்; தமிழரசியைப் பார்த்தபோது, அவள் தூக்குப் பாத்திரத்தைச் சுத்தம் செய்து வைப்பதைக் கண்டான். ரொம்ப சீக்கிரத்திலே சாப்பிட்டுட்டீங்களே !’ என்று கேட்டான். ‘சாப்பிடுறதுக் கெல்லாம் டயம் எடுத்துக்கலாமா? அதான் சீக்கிரமாகச் சாப்பிட்டுட்டேன்!” என்றாள் அவள். -

‘டிச்சருக்கு எதிலுமே ஒரு ஒழுங்கு. பாத்திரத்தை நான் கழுவ ஒப்பவேயில்லீங்க, அண்ணுச்சி!”

சீதையை வீட்டுக்கு அனுப்பியதும், ஊன்றுகோல்களே இறுகப் பற்றிக்கொண்டு கவனமாக அவன் எழுந்தான். “உங்க உயிர் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை. உங்கள் அன்பை நம்பி எத்தனையோ உள்ளங்கள் இருக்கின்றன. இதை மறந்திடாதீங்க!’ என்று உருக்கமாக வேண்டிக் கொண்டான்.

அவன் பேச்சை ஆமோதிப்பவள்போல் அவள் முறுவல் பூத்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/110&oldid=663913" இலிருந்து மீள்விக்கப்பட்டது