பக்கம்:தாய் மண்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 :

அவன் ஊன்றுகோல்களின் துணையுடன் வெளியேறினன். அப்போது ஒருக்களித்திருந்த கதவு சோதித்தது. அவன் தடுமாறி விழப்போன்ை. தமிழரசி சமயமறிந்து அவனைத் தாங்கிக் கொண்டாள். வாசல் இறக்கம் வரை இறங்கி அவனுக்குத் துணையாகச் சென்றாள். உங்களுடைய பொழுதுபோக்கிலே - ஆறுதலிலே - இன்பத்திலே இந்த அைைதயின் அன்புக்கும் ஒரு இடம் தாருங்கள்!” என்று கேட்டுக் கொண்டாள்.

அவன் உணர்ச்சி வசப்பட்டான். பேசச் சக்தியற்று நின்றான். அவளது தூய்மையான அன்புக்குத் தன் பார்வை யால் நன்றியறிவு செலுத்தி, ஜய், ஹிந்த்’ சொல்லி நடந்தான். ஊன்றுகோல்கள் சத்தமிட்டு நடந்தன.

அவன் சொல்வதையே பார்த்திருந்துவிட்டுத் திரும்பிய தமிழரசி, கதவுகளுக்கு நாதாங்கி அமைத்துத் திரும்பிப் படுக்கையைச் சார்ந்தாள். இரவுப் பிரார்த்தனை நடத்தினுள். வழக்கத்துக்கு மாருக, நீண்டபொழுது தெய்வத்தை எண்ணித் தொழுதாள்.

α και β .

இறைவ! என்னை முடிவற்ற நிலையில் சிருஷ்டித்திருக் கின்றாய். அதுவே, உனது இச்சை என் மண்பாண்டத்தை அடிக்கடி காலி செய்து, புத்துயிர் நிறைக்கின்றாய்!...

‘உன்னுடைய அருட்கொடைகள் எனது சின்னஞ்சிறு கைகளில் கொள்ளக்கூடிய அளவே கிடைக்கின்றன. யுகங்கள் ஒடி மறைகின்றன. இன்னும் நீ கொட்டிக்கொண்டிருக்கிறாய். இன்னும் நிறைந்து வழிய இடமிருக்கிறது...!”

கீதாஞ்சலியின் இனிய சிந்தனையுடன் அவள் தலை யணையைத் துணைக்கு அழைத்தாள். நாட்குறிப்பை எடுத்துப் பிரித்தாள். பிறகு, மூடி வைத்தாள். மீண்டும் சிந்தனை வசப்பட்டாள். அதன்பின் இருட்டினை வரவழைத்தாள். படுக்கையில் சாய்ந்தாள். நாள் கடத்தாமல் தலைவியைச் சந்திக்க வேண்டும். எனக்கான ஒரு நல்ல முடிவை உடனடி யாகச் செய்தாக வேண்டும். கண்காணும் தெய்வம் எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/111&oldid=663914" இலிருந்து மீள்விக்கப்பட்டது