பக்கம்:தாய் மண்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மதர்! அவர்களிடம் என் இதயத்தைத் திறந்துகாட்ட வேண்டும். என்னை அறிந்தவர்கள் எங்கள் தலைவி. அப்டால், அவர்கள் சொல்லும் சொல்தான் எனக்குத் தேவ கட்ட&n!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டே வந்த போது, அவளேயும் அறியாமல் அவளுள் இனம் விளங்காத ஏதோ ஒர் இன்ப உணர்வு அரும்பாக மலர்ந்து மணக்கத் தொடங்கியது:

வீரமரபின் சரித்திரம்

பதின்மூன்று

பிொனெலிப் பெட்டியின் திசைக்குத் தன் காதுகளைத் திசைத் திருப்பிக்கொண்டு சோபாவில் வசதியாகச் சாய்ந்தி ருந்த தலைவி திலகவதி அம்மையாருக்குச் சோதனை போலத் தும்மல் ஒன்று பறிந்தது. தொடர்ந்து பெய்த அடர்மழை யின் மிதமிஞ்சிய குளிர்ச்சி அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. “த டு ம ன் பிடித்துவிட்டது. மேலைநாடுகளைப்போல் கணப்புப் பெட்டி எரிந்துகொண்டிருந்தது. அப்படி இருந்தும், அவள் மேனி வெடவெடத்தது. மூக்கை நாசூக்காக உறிஞ்சிக் கொண்டாள். கைப்பிடித் துண்டு தயார்!

பெண்டுலத்தின் அசைவைத் தவிர எங்கும் நிச்சப்தம். அசோக மரங்களின் இடைவெளியில் கனத்த இருள் செறிந்திருந்தது. மூடப்பட்டிருந்த மாடி ஜன்னல்களில் மோதி விலகிக் கொண்டிருந்தது கடலோரக் காற்று. ரம்மிய மான இள நீலநிற வெளிச்சம் இதமாகப் பரவிக் கிடந்தது. தமிழரசியைப் பார்த்துவிட்டு ரேடியோப் பெட்டியைப் பார்த்தாள் தலைவி,

  • தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் என்பது பற்றி குமாரி தமிழரசி அவர்கள் இப்பொழுது பேசுகிரு.ர்கள்’ என்று சென்னை வானெலி நிலையம் அறிவித்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/112&oldid=663915" இலிருந்து மீள்விக்கப்பட்டது