பக்கம்:தாய் மண்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

பதிவு .ெ ச ப் யப் ப ட் ட பேச்சு ஆரம்பமாகித் தொடர்ந்தது:

‘.........தொழுகைக்குரிய அன் புத்தாயும் நன்றிக்குரிய

.

இன்பத்தாய் மண்ணும் இல்லையேல், உலகம் இல்லே, சரித்திர

மும் இல்லை; அன்பு, அகிம்சை, கற்பு, சத்தியம், பொறுமை, தர்மம், தயை, ஈரம் என்பன போன்ற குணநலக் கொழுந்து கள் ஏற்றிவைக்கும் தீபமாகப் பெண் அமைகிருள். பெண்மைச் சுடரின் துரண்டுகோலாக ஆணின் பொறுப்பும் ஆண்மையின் கடனும் அமைகின்றன. ஒளியும் நிழலும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொள்கின்றன. இவ்விரு சக்தி களின் சங்கமத்தில் புதிய தத்துவம் அவதாரம் செய்கிறது. இந்தத் தத்துவம்தான் உலகம், இது உலகத்தின் சரித்திரம் மாத்திரம் அன்று; உள்ளத்தின் சரித்திரமும் இதுதான்.

‘இத்தகைய பொதுவான நியதிக் கோட்பாட்டிலே, தமிழ்ச் சமுதா யப் பெண்களுக்கென்று தனி இடம் எப்போ துமே ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. அகம் கண்டு புறம் கண்டவள் தமிழச்சி. புறம் கண்டு அகம் கண்டவன் தமிழன். மனத்தின் பற்றுக்குக் காதலையும், மண்ணின் பற்றுக்கு வீரத்தையும் இரு கண்களாக்கித் திகழ்ந்தது தமிழ்ச் சாதி!...”

மெய்ம்மறந்து லயித்திருந்தாள் தலைவி. புகைச்சல் இருமலுக்குக் கடமைச் சித்தத்துடன் நூற்று நாற்பத்து

நாலு போட்டுவிட்டாள்!

தலைவியின் மனலயிப்பையே ஒரு பெரும் பாராட்டாகக் கொண்டாள் தமிழரசி.

ரேடியோப் பேச்சு நடந்து கொண்டேயிருந்தது: “.........தமிழ்ச் சமூகத்திலே பெண்களுக்கென்று சில தனிப்பட்ட எல்லைகள் உண்டு. எல்லைகளுக்கு அவர்கள் அஞ்சவேண்டியதும், எல்லைகள் அவர்களுக்குக் காப்பு ஆக வேண்டியதும்தான் சட்டம்; நியதி. இத்தகைய கடமை ஒழுங்குக்கு மனத்தவம், மான உணர்ச்சி, அந்தரங்க சுத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/113&oldid=663916" இலிருந்து மீள்விக்கப்பட்டது