பக்கம்:தாய் மண்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14

மனதர்மம், மனப்பலம் போன்ற செம்மைப் பண்புகள்தாம் கைகொடுக்க முடியும். சீதை, கண்ணகி, பாஞ்சாவி, சாவித்திரி முதலான உத்தம மாதரசிகளே நாம் கைத்தொழ. வேண்டும்:

‘பெண்மை வாழ்ந்தால்தான் உவகிலே அன்பு, தர்மம், சத்தியம் முதலிய நியதி நெறிகள் தழைக்கும். பாரதி அழகாகப் பாடுகிருன்: ‘கலியழிப்பது பெண்கள் அறம்’ என்று தொடங்கி, வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா: மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்’ என்று சொல்விச் செல்கிருன் உயிரைக் காக்கும்; உயிரினச் சேர்த் - உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் பெற்றியைப் விளக்கம் செய்து, அப் பெற்றியையே பெண்மைக்குச் இாகவும் ஆக்கிவிடுகிருன்.

  • வாழ்க்கையிலே மனிதாபிமானத்தின் மனச்சான்றுடன் காதலிக்க, கனவுகாண, மணம் புரிய உரிமை கொள்ளும் பெண்ணின் கற்புநிறைக்குப் பூரணத்துவம் கொடுக்கும் சக்தி தாய்மைப் பண்புக்குத்தான் உண்டு. இந்த மகத்தான சக்திக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் தவம் , தியாகம், பொறுமை, அறம், அன்பு போன்ற சிறப்பியல்பு கள் வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துக்கொடுக்கின்றன! ராஜ கோபுரத்துக்கு அமைந்த பொற்கலசமாகப் பெண் உயர்ந்து காட்சி தருகின்றாள் சரித்திரம் மீண்டும் நடந்து காட்டுகிறது!...”*

தமிழரசி ஊன்றிக் கவனித்தாள். அம்மையார் கண் கொட்டினல்தானே! பேச்சுத் தொடர் நீண்டது. முடிவில்:

‘பெண் எனும் பதம் புனிதம் நிறைந்தது. அதேபோல, பெண் எனும் சக்தி புனிதம் நிரம்பியது. பிறவிக்கு ஒரு பயன் வேண்டும். அந்தப் பயனுக்கு ஒரு பொருளாகி, ஒரு பொருள் கொடுக்க வல்லவள் பெண். அந்தப் பண்பாட்டுக்கு உயிராக, வும் உயிர்ப்பாகவும் நிலவ அவள் பழகிவிட்டவள்; பழகிக் கொள்பவள்; பழகிக்கொள்ள வேண்டியவள். இந்த நியதி: யின் தர்மம் வாழ்ந்து, வாழ்த்தப்படும் போது, அவளே ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/114&oldid=663917" இலிருந்து மீள்விக்கப்பட்டது