பக்கம்:தாய் மண்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #5

உதாரணம் ஆகிருள்; அவள் ஓர் உத்தாரணமும் ஆகிருள். ஆத்ம பலத்தை ஒரு காப்புக் கவசமாகவும், ஆன்ம நேயத்தை ஒரு பண் பாட்டு அன்பாகவும், ஆத்ம நிவேதனத்தை ஒரு சத்திய தர்மமாகவும் பயிலும் தியாகம் கோபுர தீபமாகிறது. நாடும் வீடும் அவளால் ஒளி பெற்று ஜீவனுடன் விளங்கு கின்றன. ஆம்; பொற்புடைய இந்தப் புனிதமான இலட்சியம். ஒரு வீரமரபின் சரித்திரமாகி வாழ்கின்றது!...

வாழ்க பெண்மை!...

வெல்க பெண்மை!...”*

பேச்சு முடிந்தது. பேசியவரின் பெயர் விவரத்தை மீண்டும் ஒரு தடவை சொன்ஞர் ரேடியோ நிலையத்தின் அறிவிப்பாளர்,

தமிழரசி மனக் குது.ாகலத்துடன் நிமிர்ந்தாள்.

“மதர்’ இன்னமும் அதே மனலயிப்புடன்தான் இருந்: தாள். தமிழரசியின் கை ஸ்பரிசம் பட்டதும்தான், அவள் சிந்தனை கலையப் பெற்றாள். நல்ல தெளிவும் புதிய திருஷ்டி யும் உயர்ந்த லட்சியமும் உன் பேச்சிலே இடம் பெற்றிருந் திச்சு, தமிழரசி உன் கீர்த்தி மென்மேலும் வளரவேண் டும்மா!’ என்று பாராட்டிச் சொல்லி, தமிழரசியின் கன்னத் தைச் செல்லமாகத் தட்டிஞள், அம்மையார். அப்போது, தமிழரசியின் இடது கன்னத்தின் மிச்சத்தை உற்றுப் பார்த். தாள். இந்த மச்சம் ரொம்ப அதிர்ஷ்டமானதின்னு சொல்லக் கேட்டதுண்டம்மா’ என்று அதிருஷ்டத்தைக் கண்டவளெனச் சொன்னுள்.

அம்மாவின் பேச்சை ஆதரிக்கவோ, அல்லது எதிர்க்கவோ அவள் விரும்பவில்லை. குழைவுச் சிரிப்பு:மட்டும் அவள் பக்கம் இருந்தது.

மழை கொட்டத் தொடங்கியது.

மணி எட்டு நாற்பது.

மழைக்காலத்தை உத்தேசித்து, தமிழரசியை அழைத்து அவள் பேச்சை முன்னதாகவே ஒலிப்பதிவு செய்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/115&oldid=663918" இலிருந்து மீள்விக்கப்பட்டது