பக்கம்:தாய் மண்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 16

டார்கள் ரேடியோ நிலையத்தினர். அப்படிச் செய்தது இப் போது வசதியாகப் போய்விட்டது. இல்லையென்றால், மழை பில் போக-வரச் சிரமம்! தலைவியுடன் அமர்ந்து தன் பேச்சைத் தானே கேட்டது ஒரு புதிய அனுபவமாக இருந் தது, அவளுக்கு. தலைவியின் ரசிப்புத்தன்மையும் நேர்முகப் பாராட்டும் அவளுக்கு ஊக்கம் கொடுத்தன.

நடத்ததை மீண்டும் நினைத்தாள். அம்மையார் அன்று மத்தியான்னமே ஸ்கூலுக்கு டெலி போன்’ போட்டு, தமிழரசியுடன் தொடர்பு கொண்டாள். அதன் பேரில், கடமையை முடித்துக்கொண்டு நேராக இங்கு புறப்பட்டு விட்டாள். -

வேழியில் நடந்த மனப் போராட்டத்தின் ஊடாக, சுய தரிசனக் கூத்தும் நடந்து முடிந்தது. அமைதியின் துணை புடன் நேராக அம்மாவைத் தேடி மாடிக்குச் சென்றாள் தமிழரசி.

அப்போது : கண்ணுடிப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த மீன்களே யும் அவற்றிற்கு ஜீவாதாரமாக அமைந்திருந்த தண்ணி ரையும் ரசித்துக் கொண்டிருந்தாள் தலைவி. கண்ணுடித் தகடுகளில் தமிழரசியின் உருவத்தை அவள் இனம் கண்டிருக்க வேண்டும். ‘வாம்மா, வா, உன்னைத்தான் எதிர்பார்த்திட் டிருந்தேன்’ என்றாள்.

தலைவியின் அப்போதைய ரசிப்புத் தன்மைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்தாள் தமிழரசி, இப்போது அவள் மீன் பெட்டியைப் பார்த்தாள். அவளது மூங்கில் தோள்களைப் பற்றுடன் பற்றிய தலைவி, “தமிழரசி, நீ ஏனம்மா தற்கொலை செஞ்சுக்க முயன்றாய்? என்னை நரக வேதனைப் படும்படி வச்சிடப் பார்த்தியேம்மா!’ என்று பதட்டத்துடன், ஐயிரண்டு திங்களாகச் சுமந்து பெற்றவளைவிடக் கவலையாகக் கேட்டாள். வெளுத்திருந்த வதனம் மேலும் வெளுத்தது.

“என்னையும் மீறின. ஒரு கொந்தளிப்பிலே அப்படிச் செஞ்சிடத்தான் இருந்தேன். என்ளுேட தாழ்வு மனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/116&oldid=663919" இலிருந்து மீள்விக்கப்பட்டது