பக்கம்:தாய் மண்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

பான்மை எனக்குள்ளேயே நாடகம் நடத்திட்டுது: இனி அப்படி ஒரு கெட்ட ஞாபகங்கூட எனக்கு உண்டாகாது. உங்க அன்பு மேலே ஆணையம்மா இ என்று நிச்சயம்’ செய்தாள் தமிழரசி,


ஜீ f

“என் வயிற்றிலே பால் வார்த்தாயம்மா!’ ஆஹா, அந்த மாணிக்கச் சிரிப்புக்குத்தான் எவ்வளவு பூரிப்பு:

அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது இந்த நடப்பு? அரசாங்க அலுவலகத்திலிருந்து மோகன்தாஸ் என்பவர் இவ்விவரத்தைத் தெரியப் படுத்தினதாகத் தெரிவித்தாள். ‘சீதையின் தமையனுகத்தான் இருக்க வேண்டும். செக்ரட் டேரியட்'டுக்குப் போயிருக்கையில் செய்திருக்கலாம், பரவா யில்லையே, இவருக்குக்கூட என் நாடி ரகசியம் தெரிந்திருக் கிறதே! எனக்குப் புத்திமதி சொல்லும்படி முதிர்ந்த அக்கறை யுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்:

வேல்ஸ் இளவரசர் பெயரைக்கொண்ட அழகுப் பூஞ் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வராந்தாவில் பெஞ்சில் அமர்ந்து, இலங்கைத் தேயிலைத் தண் ணிரைச் சுவைத்தவாறு கேட்டாள் திலகவதி, ‘அப்புறம் என்னம்மா முடிவு செய் தாய் உன் மாரேஜ் விஷயமாக?” என்று.

அவளிடம் ஒரு வாரம் கெடு கேட்ட தலைவி இப்போது அவளையே புதுக் கேள்வியாகக் கேட்கிருளே கெடுதாண்டி நாட்கள் எத்தனையோ மறைந்துவிட வில்லையா? -

தலைவி ஏதோ பேச வாய் தூக்கினுள்; அதற்குள் மணி எட்டு அடித்தது, “சரியம்மா! உன் பேச்சு ரேடியோவிலே முடியட்டும். அப்புறம் என் பேச்சை ஆரம்பிக்கலாம்’ என்றாள், விடிந்தால் ஞாயிறு ஆனபடியால், இராப்பொழு. தில் கொஞ்சம் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்:

கடந்த நினைவு முடிந்தது. வானொலிப் பேச்சும் நிறைந்தது. இப்போது இரவுச் சாப்பாட்டுப் பிரசினையும் தீர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/117&oldid=663920" இலிருந்து மீள்விக்கப்பட்டது