பக்கம்:தாய் மண்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இனிமேல், தமிழரசியின் திருமண விஷயம்தான், மிச்சம். கடிகாரம் ஒன்பது அடித்தது.

படுக்கைக் கூடம்.

தாம்பூலத் தட்டை நகர்த்திக் கொண்டாள் திலகவதி அம்மாள்.

“தமிழரசி, முந்தின தடவை நீ இங்கு வந்திருந்த சமயத் திலே உன் மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டதும், உனக்கென்று ஒரு துணை தேவை என்பதையும் புரிஞ்சுக்கிட்டு, உன்கிட்டே என் மனசையும் திறந்து சொன்னேன். நீயும் என் இஷ்டத் துக்குச் சம்மதம் கொடுத்தாய். அதிலிருந்து உனக்கு ஏற்ற நல்ல வரன் விஷயமாய் யோசிச்சுக்கிட்டிருந்தேன். உன் பேரிலே ஸ்ரீமான் சொக்கநான் அவர்களும் கூடுதலான கவலை யும் நல்லெண்ணமும் பாசமும் கொண்டிருக்கிற உண்மையை நான் அறிந்ததாலே, அவர் காதிலேயும் இதுபற்றிப் போட் டேன். அவரும் இது சம்பந்தமாய் ரொம்பத் தீவிரமாத் தான் இருக்கார்!... நாங்க இரண்டு பேரும் சில வரன்களைச் செலக்ட் செஞ்சிருக்கோம். நாங்கள் அறிஞ்சமட்டுக்கும் இந்த மாப்பிள்ளைகள் சொக்கப் பச்சைதான்! பணமும் குணமும் கூடியிருக்கக்கூடிய இடங்கள்! உன்னை அழைச்சுக் கிட்டுப்போய் அவர்கள் ஒவ்வொருத்தரையும் தனித்தனியே நீ சந்திச்சு மனம் விட்டுப் பேசி அப்புறம் உன் மனதுப் பிர காரம் நீ நிர்ணயிக்கிற வரனையே டிஸைடு பண்ணிடலாம்னு தான் இருந்தேன்.

இதற்கு மத்தியிலே அம்பலவாணனும் சுடர்க்கொடியும் என்னைத் தேடி வந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்ட குழந்தைகள். அவங்க பேரண்ட்ஸ் இந்த இல்லத்துப் போஷணையிலே பங்கு பெற்றவங்க. வந்ததும், சுடர்க்கொடி நடந்ததையெல்லாம் சொல்லிச்சு. பிலிமிலேகூட நான் இப்படிப்பட்ட அதிசயத் தைப் பார்த்ததில்லேம்மா. தான் காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிடலாம்னு இருந்த தன்னுேட அத்தானின் மனசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/118&oldid=663921" இலிருந்து மீள்விக்கப்பட்டது