பக்கம்:தாய் மண்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

புரிஞ்சதும், உடனே தன் அத்தானுேட இன்பம்தான் பெரிசின்னு எண்ணி, அவர் காதலிச்ச உன்கிட்டவே தூது வந்து உன்னை எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக் கிட்டுதாம். நீ ஏத்துக்கலையாம்!... உன்னேட ஆருயிர்த் தோழிக்குக் குறுக்கே நிற்கிறதுக்கு நீ விரும்பாமல் ஒதுங்கிக்கிட விரும்பியிருக்கே... அந்த மனசை நான் அறிவேனம்மா! ஆணுல், அந்தப் பெண்ணே மனப்பூர்வமாகத் தன் காதலை விட்டுக் கொடுக்க ரெடியாய் இருக்குதாம்; தன் அத்தான் சந்தோஷமாயிருந்தால் அதுவே தனக்குப் பெரிய ஆறுதலாயிருக்குமென்பதாயும் சொல்விச்சுது. அம்பல வாணனைப் பார்த்தேன். இருக்கக்கூடிய நிலைமையைப் பார்த்தால், உன் நினைவிலேயே அவன் இரண்டறக் கலந்து விட்டதாகத்தான் எனக்குத் தோணுதம்மா! பாவம், அந்தப் பெண்ணைப் பார்த்தாத்தான் எனக்கு ரொம்ப ரொம்பப் பரிதாபமாய் இருந்திச்சும்மா!...”*

பேச்சை முடித்ததும், கிராம்பு ஒன்றைப் பல்லிடுக்கில் வைத்தாள், அம்மையார். தலைக்கொண்டையினின்றும்

பிரிந்து தொங்கிய இழைகளை ஒற்றுமைப்படுத்திக் கொண்டாள். -

திலகவதி அம்மாள் பேச்சை நிறுத்தி விட்டு, தமிழரசியைப் பார்த்தாள். கிராம்பின் மணம் எச்சிலில் ஊறியது.

தமிழரசி கண்களைத் தீர்மானமான அழுத்தத்துடன் சுழலச் செய்தாள்.

‘அம்மா! மிஸ்டர் அம்பலவாணனுடைய அன்புக்கும், தோழி சுடர்க்கொடியோட பாசத்துக்கும் நான் நிரம்பக் கடமைப்பட்டிருக்கேன். ஆனால், அன்பர் அம்பலவாணன் என்னை விரும்புறதும், நான் அவருக்குத் துணைவியாக வாய்க்கிறதும் இயற்கைக்குப் புறம்பானதாக என் மனச் சாட்சி சொல்லிடுச்சு!... ஒரு வேளை, நாங்க ரெண்டு பேரும் தம்பதியாய் ஆனல்கூட, உலகத்துக்கு அது ஒரு விசித்திர மான வேடிக்கையாகத்தான் தோணும்!... அம்பலவாணனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/119&oldid=663922" இலிருந்து மீள்விக்கப்பட்டது