பக்கம்:தாய் மண்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2

‘அக்கா!’ என்று அழைத்து நின்றாள் சீதை.

அவளைக் கண்ட சடுதியிலேயே, செய்தித்தானை மடித்து அவனிடம் கொடுத்தாள் தமிழரசி.

சீதை, நடைபாதைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் . வாலைக்குமரி, மூன்று வீடு தள்ளி வாசம், அண்ணன்காரர் பட்டாளத்தில் இருக்கிருராம்! அவள் தந்தை ரிக்ஷாவாலா யுத்த நிலைகளை ப்பற்றி அன்றாடம் விவரம் அறிந்துகொள்ள அவள் பத்திரிகையைப் படிப்பாள். அந்தப் பத்திரிகை தமிழரசியிடம் கிடைத்து வந்தது.

சீதை என்றால் - அவள் குடும்பத்தவர் என்றால், தமிழரசிக்கு ஒரு பரிவு - பாசம். ‘பிறந்த மண்ணுக்காக நீங்க உங்க பிள்ளை மூலம் உங்களுக்குரிய கடமைகளைச் செய்யு. lங்க. உங்க மாதிரி குடும்பங்களுக்கு நாடு ரொம்பக் கடமைப்பட்டிருக்குது. ந | ங் க ளு ம் கடமைப்பட்டிருக் கிருேம்!’ என்பாள் அவள், நடைபாதைத் தம்பதியரிடம்.

சீதையை அனுப்பியதும், தமிழரசி கூடத்துக்கு மீண்டாள்.

செக்கச் சிவந்த நெற்றிக்கு மையம் கணித்து, செக்கச் சிவந்த திலகம் இட்டுக்கொண்டாள். திலகம் வந்ததும், நெற்றிக்குத் தனிக்களே வந்தது. மங்கலச்சின்னத்தில் மங்கள கரமான செளபாக்கியம் களை கட்டிப் பொலிந்தது. மஞ்சள் பூசப்பட்டிருந்த முகத்தின் இடது புறத்துக் கன்னத்தின் மேல் வசமாக முகப்பருக்களின் நடுவே இருந்த கறுப்பு மச்சத்தையொட்டி, ஒட்டியிருந்த பவுடரின் அழுத்தத்தை டவலிஞல் மெல்லத் துடைத்தாள். இப்போது எங்கும் சமஞன - வெண்மை படிந்த - நறுவிசான அழகு படிந் திருக்கக் கண்டாள். அவள் தனக்குத்தானே ஒ. கே.” சொல்லிக் கொண்டாள். இடது தோள் பகுதியில் சுருங்கிக் கிடந்த சேலைப் பகுதியைச் சற்று இழுத்து விட்டுக் கொண் டாள். ஆகாயவர்ணச் சேலைக்குக் கிளிப் பச்சைச் சோளி வெகு பொருத்தம். கைத்தறி இனம் என்றால், அவளுக்கு இயல்பாகவே ஓர் ஈடுபாடு; அக்கறை கடமையுணர்வு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/12&oldid=663923" இலிருந்து மீள்விக்கப்பட்டது