பக்கம்:தாய் மண்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H20

காக என் துாய அன்பைக் கொடுக்கலாம். ஆனல், என்ைேட. தூய உள்ளத்தைக் கொடுக்க முடியவீங்களே!... என் பிறவிக்கு ஒரு பயன் கிடைக்க வேணும் என்கிறது என் கனவு. என் பிறப்புக்கு ஒரு அர்த்தம்- ஒரு நோக்கம் இருக்க வேனும் என்கிறது என் லட்சியம். என் கனவும் லட்சியமும் கைகூடினுல், என் பெயர் முன் மாதிரியாகிடும்! அம்மா. நானே எனக்குரிய வரனை முடிவு செஞ்சிட்டேன். நம் தாய் மண்ணின் மானத்தைக் காக்கிறதுக்காகப் போராடிய ராணுவ வீரர் அம்மா அவர்!... அவர் பெருந்தியாகி: அவரையேதான் நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். என்னுேட கனவும் லட்சியமும் பவிதமடையப் போகிற: பொன்னை வேளை நெருங்கிக்கிட்டு இருக்கிறதாகவே என் மனசு சொல்லிக்கிட்டிருக்குதுங்க, மதர்!’ என்று அவள் முடித்தாள்.

தலைவிக்கு வாயெல்லாம் பல்லானது. களிப்பு பிடிபட வில்லை. ‘உன்னுேட வாழ்க்கையிலே சகல செளபாக்கியங் களும் நிரம்பிய வழிய வேணும்னு ஆசீர்வதிக்கிறேனம்மா!’ என்று ஆனந்தப் பரவசத்துடன் சொன்னுள் திலகவதி அம்மையார்.

தமிழரசி மோனத் திளைப்பில் தன்னை மறந்து அப்படியே கட்டுண்டு கிடந்தாள்!

வரி சங்கம் நின்று ஊத... ! ?

பதின்ைகு

சுந்தரக் கனவு ஒன்று கண்டாள் சுந்தரக்கன்னி. நீரில் ஊறிய சர்க்கரை கரைந்து நீருடனேயே ஐக்கியமாகி, அந் நீருக்கு இனிப்புச் சுவை தருவதைப்போல, தமிழரசி கண்ட கனவு அவளுக்குரிய நெஞ்சத்திலே இனிப்பை வார்த்தது. கண்டபோதும் சரி, கண்டதை மீண்டும் மனத்திடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/120&oldid=663924" இலிருந்து மீள்விக்கப்பட்டது