பக்கம்:தாய் மண்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

கொண்ட போதும் சரி, அவள் அடைந்த அகமகிழ்வுக்கு எல்லையே இல்லை.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைப் பற்றி நினைத்த வாறே, மாடியிலிருந்த தலைவியின் படுக்கைக்கூடத்தின் தெற்கு மூலையில் தமிழரசி படுத்துக் கொண்டாள். கோதையார் தாம் கண்ட கன நிகழ்ச்சியினைத் தன் தோழிக்குக் கூறும் பாடல் கருத்துக்களையும் அவள் மனம் ஒதியது: “தோழி! ஆயிரம் யானைகள் சூழ வலம் செய்து நாரணன் நடக்கிருன் என்று பூரணப் பொற்குடங்கள் வைக்கப் பெற்றன. தோரணங்கள் கட்டப்பட்டன. புண்ணிய தீர்த்தம் கொணரப் பெற்றது. மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்று ஊத, மதுசூதனன் வந்து என் கைத்தலம் பற்றினன். அவன் என்னை அணைத்துக்கொண்டு தீயை வலம் செய்தான். அவனே இப்பிறவிக்கும் இன்னும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான். அந்நாரணன் என் காலைத் தன் கையால் பற்றி அம்மி மிதிக்கச் செய்தான்!

ஆண்டாளின் கனவுக் கோலத்தை அனுபவித்த மன ஈடுபாட்டில் அவள் அப்படியே உறங்கிப் போனுள். இவளுக்கும் கனவொன்று தோன்றியது. மாறி இதயம் புகுந்து ஆன்ம நேயப் பரிவர்த்தனை செய்து கொண்ட தமிழரசியும் மோகன்தாசும் மணமேடையில் மணமாலைகள் மாற்றிக் கொள்கின்றனர்; பிறகு, அவளுக்குத் திருப்பூட் கிருன் அவன். இருவரும் தீ வலம் வருகின்றனர். அவளுடைய வலது பாதத்தைத் தன்னுடைய வலது கையால் தூக்கி அம்மி மிதிக்கச் செய்கிருன் அவன். ஒருவர் சிரிப்பை மற்றவர்க்குப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டவர்களல்லவா? -

அப்போது:

தமிழரசி வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். தானும் மோகன்தாசும் தி வலம் வந்த காட்சி மீண்டும் மீண்டும் நினைவில் எழுந்தது. “ஆஹா! என் அன்பர் எவ்வளவு அழகாக

தா. ம. 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/121&oldid=663925" இலிருந்து மீள்விக்கப்பட்டது