பக்கம்:தாய் மண்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

நடந்து என்னுடன் தீ வலம் வந்தார்! இன்ப நினைவு சிதறி வீசிய இன்பக் களிப்பின் உச்சத்தில் நின்றாள் அவள். எல்லாம் ஒரே ஒரு வினாடிதான். மறுகணம், அவன் தன்னை உணர்ந்து கொண்டாள். அவ்வுணர்ச்சியின் சுழிப்பில் மோகன்தாஸைப் பற்றிய சிந்தனையும் ஊடுருவியது. சலனத்தை ஒடுங்கச் செய்துவிட்ட சாந்தம் அவளிடம் அடைக்கலம் ஆயிற்று. இருட்டின் புலனுக்குத் தோதாகக் கத்தும் கடலின் முனகல் ஒலி ஒரே சீராகக் கேட்டுக் கொண் டிருந்தது. அவளுள் .ெ ம ய் ச் சி லி ர் ப் புக் கிளர்ந்தது. ஆல்ரைட்!... என் அன்பர் இவ்வளவு நடந்தது போதும்: இவ்வளவு நடந்துகாட்டியது போதும். ஆமாம்! - மீண்டும் அவள் தூங்குவதற்கு விடிைகள் சில ஆயின.

‘இல்லம் அவளுக்குப் பிறந்தகம் கணக்குத்தான். அங்கே அவளுக்கென்று ஒரு சில உரிமைகளும் இருந்தன. குளித்து முழுகினள். இன்பக் கிளுகிளுப்புப் படர்ந்தது. உடை மாற்றினுள். புதிய உடலும், புதிய உள்ளமும் கொண்டு அவள் கடவுளைத் துதித்தாள். பிறகு, அம்மையின் படிப்புக் கூடத்துச் சோபாவில் வந்தமர்ந்தாள். தன் பையி லிருந்து எடுத்த அந்தப் பழைய பத்திரிகையைப் பாசத்துடன் புரட்டினள். வீரன் மோகன்தாசுக்கு அவள் மாலை சூட்டி, வணக்கம் செய்த படங்களைத் திரும்பவும் அவள் பார்த்தாள். தன் இதயக் காதலை அம்மாவிடம் சொன்னதும், அவள் தாமதம் செய்யாமல் தன்னை இதயபூர்வமாக ஆசீர்வாதம் செய்ததும் அவளுக்குப் பேரமைதி தந்தது.

ஆனால், ஸ்கூலிலிருந்து மதியம் புறப்பட்ட அவள், இல்லத்துக்கு வந்த பிறகுதான் நல்ல மூச்சுவிட்டாள். இதற்கிடையில். குழப்பமும் பயமும் அவளைச் சூழவே, அவளுக்கு மூச்சுவிடக்கூட ஞாபகம் வரவில்லை. நல்ல வேளை! யார் செய்த பூஜாபலனே, அவளுடைய உயிர் யாதொரு விக்கினமும் அடையாமல் சுக செளக்கியமாகவே இருந்து வந்தது. தூக்கமாத்திரைகள் அவள் ஜீவனுக்கு நடத்திய சோதனையிலிருந்து தப்பிப் பிழைத்த பின்னர், ‘உங்க உயிர் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை; உங்கள் அன்பை நம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/122&oldid=663926" இலிருந்து மீள்விக்கப்பட்டது