பக்கம்:தாய் மண்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

எத்தனையோ உள்ளங்கள் இருக்கின்றன. இதை மறந்திடா தீங்க!” என்று ராணுவ வீரன் மோகன்தாஸ் எச்சரித்துச் சொன்ன உரிமைப் பாந்தவ்யத்தை அவள் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். புத்தம் புதிய அர்த்தமெல்லாம் தோன்றியது. இடைவழியில் இறங்காமல் கொள்ளாமல் அவளுடன் கூடவே வழிப்பயணம் செய்தன. குழப்பமும் பயமும். “அம்மா இந் நேரம் என் நிமித்தம் ஒரு முடிவைச் செய்து வைத்திருப்பார் கள். அவர்கள் முடிவும் என் முடிவும் எப்படியும் ஒன்று போலிருக்க முடியாது. ஒன்றுக்கொன்று மாருகவேதான் கும். அப்படியென்றால், பார் முடிவுக்கு என் வாழ்க்கை தாம்? இந்தப் பயமும் குழப்பமும் அவளை ‘‘ ஆட்டிப் படைத்தாலும், இல்லத்தின் தலைப்பை மிதித்த வுடன் அவளுக்கு எங்கிருந்தோ அமைதியும் மகிழ்வும் ஒடி வந்து அவள் நெஞ்சில் தஞ்சமடைந்தன. “என் இதயத்தை அம்மாவிடம் திறந்து காட்டிவிட்டால், அப்புறம் அவர்களே எனக்கேற்ற முடிவைச் சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும் எனக்கு அனுசரணையாகத்தானே அவர்கள் சொல்லுவார்கள்: என்னை அறிந்தவர்கள் மதர். அவர்கள்தான் என் தெய்வம்! அவர்கள் வாக்குத்தான் எனக்குத் தேவகட்டளை! ஒரு சமயம் என் கனவுக்கு எதிரிடையாக - என் தவத்துக்கு மாருக அவர் கள் தீர்ப்பு வழங்கிவிட்டால் ...? - சிந்தனையைத் தொடர முடியவில்லை, அவளால். ஆனல் வழக்கம்போலக் குழப்பமும் அச்சமும் மாத்திரம் தொடர்ந்தன.

இந்திலையுடன், இல்லத்திற்கு வந்ததும் வழக்கம்போல் அவள் நாலாடக்கமும் சென்று திரும்பினுள் படித்த இடம், விளையாடிய இடம் என்று அவள் ஒவ்வோர் இடமாக நினைவு படுத்திக்கொண்டு நின்றாள்: ஒரு விடிை கண்களை மூடிக் கொண்டாள்; பழைய காட்சிகளே நினைந்து மகிழ்ந்து முடிந்த தும் கண்களைத் திறந்தாள். அம்மாவின் சந்திப்புக் கிட்டியது, தன் முடிவுக்கு ஆசியும் கிட்டிவிட்டது!...” .

இதற்கு மத்தியில் அவள் மனம் எத்தகைய பயங்கரப் போராட்டத்தை நடத்திக் காட்டிவிட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/123&oldid=663927" இலிருந்து மீள்விக்கப்பட்டது