பக்கம்:தாய் மண்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இந்த மனத்திற்கு எதையும் மறக்கத் தெரியாதோ? எது வுமே மறந்து போகாதோ? மரத்துப் போகாதோ?

பத்திரிகை காற்றில் ஒசைப்படுத்தியது. தமிழரசி சுயப் பிரச்ளுைக்கு வந்தாள். தலைப்புப் பக்கம் தலைமாறிக் கிடந் தது. வசம் அமைத்துப் பார்த்தாள். பழைய தாள்!ஐ.நா. பந்தோபஸ்து சபையில் பாரதத்தை ஏசிய பாகிஸ் தானத்தின் நன்றி கொன்ற விவரங்களைக் காட்டிக்கொண் டிருந்தது. அது இது சம்பந்தமாகப் பள்ளியில் ஆசிரியைகள் கூடத்தில் பேச்சுக்கள் எழுந்தபோது, தன்னைப் போலவே உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய குமாரி கதீஜா பேகத்தையும் அது தருணத்தில் அவள் நினைத்துக்கொள்ள வேண்டியவள் ஆளுள்.

காலடிச் சத்தம் கேட்டது.

திரும்பினள்.

அைைத மனேயின் தாய் திலகவதி அம்மையார் அங்கு வந்தாள். அவள் கையில் ஒரு பச்சை மண் இருந்தது. அதன் கால்கள் இரண்டும் முழங்கால்களோடு அரைகுறை யாகக் காட்சியளித்தன. செக்கச் சிவந்த பாதங்களுக்குப் பின்னணி கொடுத்தது, அம்மையின் கறுப்புப் புடவையின் முன்றானே.

தமிழரசி அந்தக் குழவியை நெடுநேரமாகப் பார்த்தாள். “படைப்புச் சிக்கலுக்கு ஒரு உதாரணம்!” என்று அனுதாபப் பட்ட தலைவியின் மொழிகள் அவளது செவிகளில் எதிரொலித் தன. அவளது மனத்திரையில் மோகன்தாஸின் உருவம் பதிந்தது. எனக்கென ஆண்டவனல் சிருஷ்டிக்கப்பட்டவர் அவர். நான்தான் அவரைக் காலங்கழித்துப் பார்க்கிறேன். அதெைலன்ன? எங்கள் மனச் சந்திப்பு எங்கள் இருவரது ஜனன காலத்தின்போதே கூடியிருக்க வேண்டும். பிறப்பு என்பது வழி வழித் தொடர்பு உடையது என்று சொல்லப் படுகிறது! விட்டகுறை - தொட்டகுறையின் தாத்பர்யமே அதுதான்! இன்பச்கனவு தந்த ஊட்டத்தின் நிறைவுடன் அவள் மீண்டும் அந்த மதலையைப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/124&oldid=663928" இலிருந்து மீள்விக்கப்பட்டது