பக்கம்:தாய் மண்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

தலைவியைப் பெரிதும் சிந்திக்க வைத்தது அந்த அனுதைப் ஆ. இம்மாதிரி ஊனப் பிறப்புகளுக்கு உரிய புகலிடத்தில் அதைச் சேர்ப்பிப்பதைப் பற்றி அவள் வெகு தூரம் யோசித் தாள். சேக்ரட் ஹார்ட் மிஷன்'தான் உகந்ததென்று சொன் ஞர்கள்!

தமிழரசி, இந்த மாதிரிதானே நானும் ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப் பட்டிருப்பேன்? நானும் இருபத்திரண்டு வருஷங்கள் வாழ்ந்துவிட்டேனே! தெய்வத் தின் முன்னே யாருமே அனுதையல்ல என்கிற தத்துவம் எவ்வளவு உண்மை!... அந்த வேதவாக்கு பொய்யாயிருக்கும் பட்சத்தில், நான் பச்சை மண்ணுக இருந்த தருணத்திலேயே காய்ந்த மண்ணுக்குக் காணிக்கையாகி யிருக்கமாட்டேனு?...” என்று எண்ணமிட்டாள்.

புத்தக அலமாரியினின்றும் ஒதுங்கி மறைந்து கிடந்த து ஒரு நூல்- நன்னூல் விருத்தியுரை': அது அவளுடையது. அதை எடுத்துப் பைக்குள் திணித்தாள். இப்போது, மதிப்புக் குரிய திலகவதி அம்மையை ஆழ்ந்த அமைதி கணிய நோக்கி ள்ை. ஆயா ஒருத்தியிடம் அந்தக் குழந்தையைக் குறிப்புடன் கொடுத்து அனுப்பிவிட்டு வந்து சோபாவில் சாய்ந்தாள், ‘பெண் குழந்தைக்கு இப்படியொரு ஊனத்தைப் பகவான் கொடுத்திருக்க வேணும். பெண் என்ன... ஆணுக இருந் திருந்தால்கூட ஊனம் என்று ஏற்பட்டுச்சின்ன அது ஊனம் தானே?...” என்று அவளைப் பார்த்துச் சொல்லி விட்டு, ‘இல்லையாம்மா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்கவும் செய்தாள்.

தமிழரசி பக்குவம் செறிந்த புன்னகையை மனத் தெளி வுடன் வெளியிட்டாள். “ஆம்” என்று தலையை உலுக்கினுள். அதே சூட்டுடன், “அம்மா! என்னுடைய காதலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துறதுக்கு முன்னதாக, அவர் படத்தை உங்களுக்குக் காண்பிக்க ஆசைப்படுறேனுங்க!” என்று மிடுக்குடன் தெரிவித்து, அதே உணர்வின் காம்பீர்யத் தெளிவுடன் பத்திரிகையில் வெளியாகியிருந்த படங்களைச் சுட்டு விரலால் அடையாளம் வைத்துக் காட்டினுள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/125&oldid=663929" இலிருந்து மீள்விக்கப்பட்டது