பக்கம்:தாய் மண்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சுட்டிய இடத்தில், மோகன்தாஸின் உருவத்தோடு, அவனுக் குச் சொந்தமான அந்த இரண்டு ஊன்று கோல்களும் பளிச் சிட்டுத் தெரிந்தன.

தலைவி திலகவதி அம்மையார் பொங்கி வந்த மலர்ச் சிரிப்புடன் வெகு ஆவலாகப் பார்த்தாள்!

மறுகணம் :

‘அம்மா!...” என்று அவளேயும் மீறிய கதியில்-அவளுக் கும் கட்டுப்படாத சுருதியில்-அவளால் தாங்கிக்கொள்ள முடியாத தவிப்பில் அலறினுள் அம்மையார். மிகவும் பெருமையுடன் திண்மையாக நின்ற தமிழரசியைப் பார்த்த போது, அவளது கண்ணின் கருமணிகள் பளபளத்தன.

தலைவியின் விரல்கள் மோகன்தாஸின்ஊன்றுகோல்களைத் தடவின. ‘அம்மா, என்னுேட காதலர் ஒரு ஜவான் . கடமை வீரர்! தாய் நாட்டின் நிமித்தம் அவர் சொந்தக் கால்களில் நின்று பணி புரிந்திட்டு, அந்தப் பணிக்குச் சாட்சி யாக அவர் இப்போது செயற்கைக் கால்களோடே உட் கார்ந்துகிட்டு இருக்கிருரம்மா!... அவர் ரொம்பப் பெரிய தியாகியம்மா!...” என்று உணர்ச்சி பொங்க விவரித்தாள் தமிழரசி,

‘அம்மா தமிழரசி!... உன்னையே ஒரு உதாரணமாக ஆக்கிக்கிட்டுத்தான் நீ உன் ரேடியோப் பேச்சை எழுதி ஞயா?... நீயே ஒரு அற்புதமாக என் கண்களுக்குத் தோன்று கிருயம்மா!... உன் தியாகத்தை - உன் துணிவை - உன்னுடைய தாய்மண் பாசத்தை எப்படிப் புகழ்கிறதின்னு,

எனக்குப் புரியலேயம்மா!... உன் பிறவிக்குப் பொருள் கிடைச்

சிட்டு தம்மா தமிழரசி!...” வரவர, அம்மையாரின் குரல் இறங்கி வந்தது. தமிழரசி மீதிருந்த கண் நோக்கை இன்னமும் அவள் எடுக்கவில்.ே

தமிழரசி உணர்வுகளின் பெருக்கத்தோடு நின்றாள்.

தலையை உயர்த்தினள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/126&oldid=663930" இலிருந்து மீள்விக்கப்பட்டது