பக்கம்:தாய் மண்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

அமைதியின் பொலிவு அவள் கண்களிலே இருந்தது. அதே நிறைவுடன் தலைவியைப் பார்த்தாள்.

‘அம்மா, நீங்க போற்றுகிற அளவுக்கு நான் என் கடமையைச் செய்கிறதுக்குத் துணிஞ்சேன்னு சொன்னல், அந்த ஒரு பக்குவமும் தெம்பும் உங்களுடைய தியாக சீலத்திலேருந்து நான் கிரகிச்சுக் கற்றுக்கிட்டதாகத்தான் இருக்க முடியும். இவ்வளவு காலமாக நீங்க உங்களையே, தியாகம் பண்ணிக்கிட்டு சமூகசேவை செய்து வர் lங்களே அந்த ஒரு தர்மத்துக்கு-சத்தியத்துக்கு-அன்புக்கு-பாசத் துக்கு முன்னலே என் கடமை எம்மாத்திரம், மதர்?... என் நெஞ்சிலே மட்டும் நீங்க உயிர் வாழலிங்க, மதர்! நான் சிந்திக்கிறதிலே - பேசுறதிலே - படிக்கிறதிலே - படிச்சுக் கொடுக்கிறதிலே-எழுதிறதிலே ஏதாவது புதுமை இருந் தால், எல்லாவற்றுக்கும் உங்கள் உதாரணம்தான் எனக்கு ஆதாரம், மதர்! உங்களுக்கு என் ஆயுள் பரி ய ந் த ம் எவ்வளவோ க ட ப் பா டு கொண்டவளம்மா உங்க தமிழரசி!...”

இனிப்புக் கண்ணிர் வழிந்தோடியது.

இனி அவளால் பேச முடியாது. அவள் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. இமை வட்டங்களின் அடி வளைவுகள் வலித்தன. ஈரக்கசிவு இருந்தது. இதழ்களின் முனைகளிலே, ‘அம்மா, என்னுடைய கனவு நல்லவிதமாய் வெற்றி அடைய வேணும்னு இன்னெரு தரமும் நீங்க வாழ்த்தி ஆசீர்வாதம் செய்யுங்கம்மா!” என்று உணர்ச்சிச் சுழிப்புடன் தமிழரசி கெஞ்சிள்ை.

திலகவதி அம்மையார் ஒரு தாயின் ஸ்தானத்தில் நின்று தமிழரசியை மார்போடு ஆரத்தழுவி, அனைத்துக்கொண்டு, இரண்டாம் தடவையாகவும் வாழ்த்தினுள்; ஆசி வழங்கி ள்ை. ஒரு மாத்திரைப் பொழுது அவள் அப்படியே அயர்ந்து போளுள். வாய் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு நின்றாள். கண்ணிர் பொழிந்தது. இந்தச் சமயம் தப்பில்ை மறுசமயம் வாய்ப்பது அரிது என்று எண்ணியவள் போலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/127&oldid=663931" இலிருந்து மீள்விக்கப்பட்டது