பக்கம்:தாய் மண்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

பதட்டப்பட்டு எதையோ சொல்லிவிடத் துடித்தாள், அம்மையார். ஆனால், அப்போதைக்கு அவள் இதழ்களைப் பிரிக்கவேயில்லை!...

மாரகச் சேலையைச் சீர் செய்துகொண்டு நேர்கொண்ட பார்வையைச் செலுத்தினுள்: தலைவியின் தடுமாற்றத்தை அவள் கவனித்தாள். ‘அம்மா! என்னங்க அம்மா?...’ என்று பதறினுள். அதற்குமேல் எதுவும் வாயெடுத்துச் சொல்லும் நிலையில் இருக்கவில்லை தமிழரசி. பத்திரிகையை எடுத்து எட்டாக மடித்துப் பைக்குள் திணித்தாள். என் இதயத்தை அன்பர் மோகன்தாஸ் அவர்களிடம் சமயம் கணித்துத் தெரிவித்து விடவேண்டும்’ என்று அவள் தன் மன டயரியில் குறிப்பு எழுதி வைத்தாள். காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டதும் அவள் இங்கிருந்து புறப்பட முயன்றாள். அம்பலவாணனுக்கு உடல் நலமில்லை யென்று கேள்விப்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தாள் திலகவதி அம்மையார். இந்த அறிவிப்பு, தமிழரசியின் மன ஒடையின் நீரோட்டமாக இயங்கிச் சுழித்துக்கொண்டே யிருந்தது. நீரலைகளில் சலனம் எழும்பியது.

அம்பலவாணனின் பங்களாவுடன் மாடியில் இருந்த வண்ணமே தொலைபோசித் தொடர்பு கொண்டாள். இணைப்புக் கிடைத்தது. அவளது பெயரைக் கேட்டார்கள். சொன்ள்ை. “மிஸ்டர் அம்பலவாணனுடன் பேசவேண்டும்’ என்று மறுபடி நினைவுறுத்தினள். -

இப்பொழுது, அம்பலவாணன் குரல் கொடுத்தான். குரல் உற்சாகமாக இருந்தது. அவளுக்கு ஆறுதல் ஏற்பட்டது. நேரில் புறப்பட்டு வருவதாக அவள் சொன்னுள், அதைக் கேட்டதும், அவன் அடைந்த மகிழ்வை, அவன் தந்த குரலில் கேட்க முடிந்தது அவளால். பேச்சை முடித்துக் கொண்டாள். விடைபெற்றுப் புறப்பட்டபோது, அவள் தலைவியிடம் விவரம் சொன்னுள்.

‘உன் அன்பு அமுதமாகப் பெருக்கெடுக்க வல்லது. அவசியம் அம்பலவாணனைப் பார்த்துவிட்டுப் போ. நீ இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/128&oldid=663932" இலிருந்து மீள்விக்கப்பட்டது