பக்கம்:தாய் மண்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

வரும்போது, கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கும் தோதுடன்

வரவேணும், தமிழரசி!’

‘நல்லதுங்க, மதர்!’’ மண்ணிடைக் காலூன்றி நடைபயிலக் கற்றுக்கொண்ட பெண் குழந்தை சிரிப்பின் திளைப்பில் காட்சியளிப்பதைப் போலத் தமிழரசியும் காட்சியளித்தாள். அவளது இடது கன்னத்தின் அழகிய மச்சத்தையே பார்த்தவாறு குமாரி தமிழரசிக்கு விடை கொடுத்தனுப்பிளுள் குமாரி திலகவதி அம்மையார்:

சுடர்க்கொடி

பதினைந்து

விதியின் பாதை ஒருவருக்கும் புரியாதது. வீதியின் பாதையோ எல்லோருக்கும் புரியும்; புரிந்தது. சாந்தோம் வட்டத்தைவிட்டு விலகி மேற்கு நோக்கி நடந்தாள், தமிழரசி. மயிலாப்பூரின் கம்பீரம் அவளே வரவேற்றது. லஸ் முனேக்கு அழைத்துச் செல்லும் அந்தப் பெருஞ்சாலேயின் தொடக்கத்திலேயே இருந்தது, அம்பல வானின் மூன்று அடுக்கு மாடி வீடு, ஆனந்த விலாசம் அது. அந்தப் பெருமனையை இலக்கு வைத்து நடந்தாள், தமிழரசி. கால் பெற்றதே ஒரு பெரும் பேருகக் கருதிக் கொண்டே, அவள் வழி மிதித்து வழி தொடர்ந்தாள். உடன் தொடர்ந்த காலைப் பொழுதின் துணையுடன் அவள் நடந்தாள். வாசனைத் திரவிய சாலையை அவள் கடந்த போது, அவளுள் மருக்கொழுந்தின் வாடையாக அம்பல வாணனின் ஞாபகம் மணத்தது. .

மாதா கோயிலுக்கு விரைந்து போனர்கள், ஆண்களும் பெண்களும். இந்தப் பட்டியலுக்குப் பழமும் பிஞ்சும் விலக்கல்லவே! . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/129&oldid=663933" இலிருந்து மீள்விக்கப்பட்டது