பக்கம்:தாய் மண்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

அம்பலவாணனைச் சந்தித்த சம்பவத்தை அவள் மீண்டும். எண்னமிட்டாள்.

இப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை. கோடை முடிந்து, பள்ளிக்கூடம் திறந்த புதிது. அஞதை இல்லத்தைத் தரிசித்த பின்னர், மெரினக் கடற்கரை ஓரமாக நடந்து உழைப்பாளிகளின் சிலைக்குப் பக்கமாக ஓர் ஒரத்தில் அமர்ந்திருந்தாள். மாலை மயங்கியது. மெல்லிய இருட்போர்வை மெல்ல விரிந்தது. இருளினல் கண்களுக்குக் குந்தகம் விளைய முடியாத வகையில், “நியான்சைன் விளக்குகள் எரிந்தன. கடலின் இரைச்சல் அவள் இதயத்தில் அடங்கி அடங்கி எழுந்தது.

கடல் மணலை வளைத்தவாறு, தன்னைப்பற்றியும், தன் எதிர்காலத்தைப் பற்றியும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண் டிருந்தான். முன்பு தன்னுடன் படித்த ஸ்டெல்லா மேரியை. அப்போதுதான் அவள் வழி அனுப்பி வைத்தாள். .

மழைக்குணம் மாறி வந்தது. எனவே, தமிழரசி வீடு செல்ல எழுந்தாள். மேலாக்கை இடது தோள் பட்டைப் பகுதியில் கொய்து போட்டுக் கொண்டாள். நீல விதானத் தில் நட்சத்திரக் கன்னிகள் முத்துச் சுடரொளி சிந்திச் சிரித் தனர். அதன் அழகு, அலேக்குமிழ்களில் பட்டுச் சிதறியது. கொஞ்ச நேரம் கடலோரத்தில் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கடற்கரைக் கிளிஞ்சல்களைப் பாதங் களால் எற்றியவாறு நடந்தாள். ‘பாவம், இந்தக் கிளிஞ்சல் கள் பயன் இழந்து போனபடியால், நாதி இழந்து போனபடி யால், நாதி இழந்து இப்படிக் கிடக்கின்றன: ஆமாம்; பிறப்பு என்றால் ஒரு பயன் இல்லாவிட்டால், என்ன புண்ணியம்?... பிறவிக்கு ஒரு பயனும் ஒரு நோக்கமும் ஒரு அர்த்தமும் வேண்டுமென்றுதானே பெரியவர்கள் பேசியும் பாடியும். சென்றிருக்கிறார்கள்!...” என்று மன வேட்கையுடன் . சிந்தனைக்குச் சூடேற்றி, அலே துரை ஒரமாகக் காலாற நடத்.

தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/130&oldid=663935" இலிருந்து மீள்விக்கப்பட்டது