பக்கம்:தாய் மண்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

நங்கூரம் பாய்ச்ச ஆயத்தம் செய்த இலங்கைக் கப்பல் ஒன்று தூரத்தில் தெரிந்தது. கரை நோக்கிச் சரிந்து நெளிந்து கொண்டிருந்த தோணிகள் பல தெரிந்தன.

பத்துத் தப்படிகள் கடந்திருப்பாள். அப்போது : யாரோ ஒர் அபலைப் பெண்ணைக் கடலிலிருந்து காப்பாற்றிக் கரையில் கொண்டு வந்து போட்டான் ஓர் இளைஞன். விதி வலிது. அவன் தன் உயிரைத் திருணமாக எடைபோட்டு,பெண்ணைக் காப்பாற்றக் கடலில் குதித்ததற்கு ஒரு பவன் கிட்டாமல் போயிற்று. அந்தப் பெண் அப்போது சாவுக்கு அடிமையாகி விட்டாள்.

இம்முடிவைக் கண்டதும் அவ்விளைஞன் வாய்விட்டு அழுதான். யாரோ ஊர் பேர் தெரியாத ஒர் அபலைக்காக அப்படிக் கண்ணிர் பெருக்கிக் கதறிய அவனது ஈர நெஞ்சத் தைக் கண்டதும் தமிழரசிக்கு மன நெகிழ்ச்சி உண்டானது. அவனைச் சமாதானப்படுத்தும் பொறுப்பை அவளே எடுத்துக் கொண்டாள். அனுதைச் சவத்தைப் பற்றிப் போலீசுக்குத் தகவல் கொடுத்து ஆவன செய்த பிறகு, அவனைக் காரில் அனுப்பிவிட்டு அவள் பிரிந்தாள்.

அந்த யுவன்: அம்பலவாணன். அச்சந்திப்புக்குப்பின் ஒன்று, இரண்டு என்று சந்திப்புக் களின் எண்ணிக்கை வளர்ந்தது. நாட்களும் எத்தனையோ கண்கட்டு மாயமாக மறைந்து விட்டன. .

ஒரு முறை கடல் மல்லைக்குப் பிக்னிக் போயிருந்: தார்கள், பள்ளியிலிருந்து. தமிழரசியும் சென்றிருந்தாள். காலத்தை வெற்றி கொண்ட கலையின் வெற்றிச் சிறப்பை ரசித்துக் கொண்டிருந்தாள், தமிழரசி. கடற்கரைக் கோயில், அவளுக்குக் கிடைத்தது.

பள்ளி இறுதி வகுப்புக்கு மாமல்லபுரம் ஒர் உபபாடம். இப்பயணம் மேலும் உதவுமே!

அப்போது, அம்பலவாணன் அவளைச் சந்தித்தான். வணக்கம் சொல்லி, செளக்கியமா?’ என்ற கேள்வியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/131&oldid=663936" இலிருந்து மீள்விக்கப்பட்டது