பக்கம்:தாய் மண்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சந்தித்துக் கொண்ட அவனும் அவளும் தனித்திருந்து உரையாடி மகிழ ஒரு வாய்ப்பு அவ்விடத்தில்தான்

உருாைனது.

அவனைப் பற்றிச் சில புள்ளி விவரங்களை அவள் நாளடைவில் அறிய முடிந்தது.

அவன் பெரிய இடத்துப் பிள்ளை. பணத்தைக் கொட்டிக் குவித்துவிட்ட படத் தயாரிப்பாளர் அவன் தந்தை. பி. ஏ. படிப்பு. நல்ல இதயம். மிகவும் அபூர்வமான குணம். இந்தப் பிள்ளைதான் தாய்தந்தையர்க்குச் சகலமும்.

அனுதை என்ற அளவில் தமிழரசியைப்பற்றி அவன் கண்கள் குளமாயின. “சிருஷ்டியிலே எவ்வளவோ புதுமைகள் இருக்கு. ஆண்டவன் முன்னலே நாமெல்லாம் ரொம்ப அற்பம். ஆணுலும், சில சில உண்மைகளை நாம் உள்ளது உள்ளபடி புரிஞ்சிக்க முடியுது. எனக்குச் சகல வசதியும் இருக்கு. ஆல்ை, எனக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தோணலை. அதேபோல, நீங்களும் உங்கள் மனக்குறையைப் பெரிசுபடுத்திக்காமல் இருக்க வேணும் என்கிறதுதான் என் அபிப்பிராயம்!” -

அவன் பேச்சு புதுவிதமான அமைப்பில்தான் தொனித் தது. அவன் தொடர்ந்தான் : “தமிழரசி, உங்க சூழலிலே நான் இருக்கிறப்போவெல்லாம் என்னையும் மீறின அமைதி எனக்குக் கிடைக்குது; அதுக்கு உங்க அன்புதான் காரணமாக இருக்கவேனும்!” .

அவளுடைய அன்பைப் பெரிதுபடுத்திப் புகழ்ந்த அவன், கடைசியில், அவளுடைய அன்பினை அவள் பெரிதாகப் புகழும் படி செய்துவிட்டான். அவளைத் தன் பங்களாவுக்கு அழைத் தான். அவளால் தட்டமுடியவில்லை. தோழிகளிடம் கேட்டுக்கொண்டு அவனுடன் காரில் சென்றாள். தோழிகள் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவளோ மிகவும் இயல்பாகச் சிரித்துவிட்டு, ‘அன்பர் அம்பலவாணன் என் நண்பர். அவ்வளவுதான்!’ என்று முத்தாய்ப்பிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/132&oldid=663937" இலிருந்து மீள்விக்கப்பட்டது