பக்கம்:தாய் மண்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

விட்டாள். உலகத்தின் கொள்ளிக் கண்களை அவள் அறியாதவளா?

‘ஆனந்த விலாச’த்தில் அவள் திக்குமுக்காடிப் போனள், அவனுடைய அன்பான ராசோபசாரத்தைக் கண்டு. ‘அன்பு டைமை என்பதற்கு ஒர் அதிகாரமே ஒதுக்கப்பட்டிருப்பதற்கு இப்போதுதான் காரணம் புரிகிறது; ஆல்ை, ஒன்று: உங்கள் அன்பைச் சுமக்கும் சந்தர்ப்பம் திருவள்ளுவருக்குக் கிடைத் திருந்தால் இன்னும் ஒர் அதிகாரத்தைக் கூட்டிப் பாடி யிருப்பார்!’ என்று ஒரு போடு போட்டாள், தமிழரசி. அவனைச் சிரிக்கச் செய்துவிட்டு, அவள் சிரிக்காமல் போய். விட்டாள். நல்ல நண்பர் இவர்!’

பழைய நினைவுகளினின்றும் மீண்டாள், தமிழரசி,

‘ஆனந்த விலாசம் வந்தது: தமிழரசிக்குத் தன் நினவும் வந்தது.

அவள் பங்களாவிற்குள் பிரவேசித்தாள். கருநொச்சிச் செடிகள் தலை மட்டத்தில் அமைத்துக் கொடுத்திருந்த பாதை வழியே நடந்து சென்றாள். புங்கைப் பூக்கள் சிதறிக் கொண் டிருந்தன. இப்போது வருவது இரண்டாம் தடவை. பெரு. மனேயின் அமைப்பும் அந்தமும் அவளுக்கு இதம் தந்திருக்க வேண்டும்.

அம்பலவாணனின் பெற்றாேர்களைத் தமிழரசி அறிவாள். அவர்களிடம் அவள் விஷயத்தைச் சொல்லியபின் உள்ளே சென்றாள். மொஸைக்” தரை வெகு நேர்த்தி. கால் பாவி நடந்தாள். மனம் அடித்துக் கொண்டது. இரண்டாம் கட்டில் அம்பலவாணன் ஸ்பிரிங் கட்டிலில் படுத்திருந்தான். நீண்டுயர்ந்த சாமான் மேஜை தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள மருந்து வகைகளே இட்டு நிரம்பி வழிந்தது. பாத ஒலி கேட்டு அம்பலவாணன் எழுந்தான். முதுகுத்தண்டுக்கு அனைவாகத் திண்டை நகர்த்திக் கொண்டான். அவன். அவளேக் கண்டதும், “வாங்க!’ என்று உள்ளன்பு வழிய வரவேற்றான். அவளிடமிருந்து பதில் வணக்கத்தையும், பெற்றுக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/133&oldid=663938" இலிருந்து மீள்விக்கப்பட்டது