பக்கம்:தாய் மண்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

‘உடம்பு இப்போது எப்படி இருக்குதுங்க?’ என்று சுவாதீனமான பரிவுடனும் பாசம் முகிழ்த்திட்ட நட்புடனும் அவள் விசாரித்தாள்.

‘நெள ஐ ஆம் ஆல் ரைட்” என்றான் அவன். அவனைப் பார்த்துக்கொண்டு அவள் கூடை நாற்காலியில் குந்தினுள்; சடை நுனியிலிருந்த நீல ரிப்பன் அவளது நெஞ்சின் கீழோரத்தில் வந்து விழுந்தது. தள்ளிவிட்டாள்.

அருகில் கிடந்த “டிபா’யில் இருந்த ஆரஞ்சுப் பழங்களே எடுத்து அவளிடம் கொடுத்தான். ‘சாப்பிடுங்க!...”* என்றான்.

அவள் வாங்கிக் கொண்டாள். “மதர் சொல்வித்தான் உங்களுக்கு உடம்பு சுகமில்லை என்பது தெரியும் எனக்கு!’’ என்றாள் அவள்.

‘எனக்குக்கூட மிஸ் திலகவதி அம்மாள் சொல்லித்தான் தெரியும்’ என்றான் அவன்.

அவள் சொன்னது, அவன் நலமிழந்து இருப்பதைக் குறித்து.

அவன் சொன்னது என்ன?... தமிழரசி குழப்பத்தை அறவே தவிர்த்தாள். ஆனாலும், உள்ளுற ஒரு தவிப்புப் புழுங்கியது. அவனே அவள் ஏறிட்டுப் பார்த்தாள்.

அம்பலவாணனின் முண்டா பனியனுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது மைனர் சங்கிலி. இல்லத்தின் தலைவியோடு போனில் பேசிக் கொண்டிருந்தேன். உங்கள் திருமணம் பற்றி விவரமாகச் சொன்னர்கள். ரொம்பவும் பெருமையாகச் சொன்னர்கள். உங்களைத் தெய்வப் பெண் ளுகவே நான் மதிக்கிறேன்!”

தமிழரசிக்கு இப்போது எல்லாம் விளங்கியது. அவனு .ைய புகழுரை அவளுக்குப் பெருமையாகவே இருந்தது! அவன் பேச்சு அவளுக்குப் பெருமையாகவே இருந்தது: அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/134&oldid=663939" இலிருந்து மீள்விக்கப்பட்டது