பக்கம்:தாய் மண்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

பேச்சுக்கு அவள் மறுமொழியாக எதுவும் சொல்லவில்லை. மெளனமாகவே இருத்தாள். இரு விடிைகள் கழித்து ‘உங்கள் சந்திப்பை நான் ஒரு பெருமையாகவே எண்ணி எப்போதும் போற்றுவேன்,’ என்று மெளனத்தை விழுங்கிப் பேச்செடுத்தாள்.

“அப்படியா? மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் அன்பு எனக்கும் பெருமை தருகிறது. உங்கள் பாசம் எனக்கு எப்போதும் அருமருந்தாக அமையவல்லது. ரொம்ப நன்றி, தமிழரசி!’

அவள் ஆனந்தத்தின் நிறைவுடன் தோன்றினுள். அதன் விளை பலனுக, அவள் கண்கள் கசியத் தொடங்கின. அவள் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இனி அவள் புறப்பட்டு விட வேண்டும். உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி மீண்டும் வேண்டிக்கொண்டு எழுந்தாள்.

‘நேரமாகிவிட்டதா? இன்னும் கொஞ்சம் நாழிகை என்னுடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? இனி நாம் எப்போது சந்திக்க முடியுமோ?...’ என்றான், அவன். அவனேயும் மீறிக்கொண்டு குரல் தளர்ந்தது. தொண்டை யைக் கனைத்தபடி சமன் செய்தான். ‘ஒரு சந்தோஷச் சமாசாரம் உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. இதோ, பாருங்கள்!’ என்று கூடமாக உரைத்தபடி, ஒர் அழைப் பிதழை அவள் கைகளில் வைத்தான்.

சிரஞ்சீவி அம்பலவாணனுக்கும் செளபாக்கியவதி சுடர்க் கொடிக்கும் நடக்கப்போகும் வதுவை விழா அழைப்பு தமிழரசியின் பார்வையில் ஆரம்பமும் முடிவும் தெரியாத இந்திரவில்லாக அழகுகாட்டி ஒளிர்ந்தது. “ஆஹா!...”

தை பதின்ைகில் திருமணம்!

உங்களுடைய பெருமனத்தையும் என் உயிர்த்தோழியின் மெய்த் தவத்தையும் நான் பாராட்டக் கடமைப் பட்டவள். இனி நான் நல்ல தூக்கம் துரங்கலாம்!’ என்று கூறி அவள் வாய் ஒயவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/135&oldid=663940" இலிருந்து மீள்விக்கப்பட்டது