பக்கம்:தாய் மண்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

சுடர்க்கொடி இரு கோப்பைகளில் சூடான காபியைச் சேர்த்து வந்து வைத்தாள். “சாப்பிடுங்க, தமிழரசி’ என்று மாருத பாசத்துடன் அவளிடம் கோரினுள்.

‘இந்தாங்க, அத்தான்!” என்று சொல்லி அம்பலவான னிடம் காபியைச் சமர்ப்பித்தாள்.

“நீயும் கொஞ்சம் சாப்பிடு சுடர்க்கொடி!’ என்றாள் தமிழரசி.

“நீங்க சாப்பிடுங்க. அவள் பங்கும் என் காபியில் இருக்கிறது!”

அம்பலவாணனின் உதடுகள் சுடர்க்கொடியின் பங்கை ஜாக்கிரதையாகக் காப்பாற்றிக் கொடுத்தன.

தமிழரசி நளினமாக நாணம் காட்டினுள். சுடர்க்கொடி சிரித்துக்கொண்டே தமிழரசியின் சார் பாக அமர்ந்தாள்.

குழந்தைகள் தினத்தன்று பிள்ளைகளுக்கு வழங்கப்படு வதற்காக இனிப்புப் பொட்டணங்கள் நூற்றுக் கணக்கில் தயாராகத் தொடங்கி விட்டன.

“'உங்க கடமை உணர்ச்சி எனக்கு அதிகமாய்ப் பிடிச் சிருக்குதுங்க!’ என்றாள் தமிழரசி,

“எல்லாம் நீங்க கற்றுத் தந்த பாடம்!’ என்று ஒரே குரலாக அவர்கள் இருவரும் எப்படி இவ்வளவு கச்சிதமாகச் சொன்னர்கள்!

மத்தியான்னம் சிறப்பான விருந்துக்குப் பிற்பாடுதான் தமிழரசிக்கு அங்கிருந்து பயணப்பட பாஸ்போர்ட்” கிட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/136&oldid=663941" இலிருந்து மீள்விக்கப்பட்டது