பக்கம்:தாய் மண்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரசி தீ ஆனுள் !

பதினறு

மயிலாப்பூர்த் திருக்குளத்தை அடைந்ததும், கபாலீள் வரர்-கற்பகாம்பிகை தம்பதியை தெஞ்சில் இருத்தி நினவிற் குள்ளாகவே தொழுதாள், தமிழரசி

அம்பலவாணனும் சுடர்க்கொடியும் புதுமணத் தம்பதி யாகப் போகும் இனிப்புச் சேதிய்ை அறிந்ததிலிருந்து அவளு டைய உள்மனம் அமைதியும் ஆனந்தமும் அடைந்தது. தன் அத்தானின் விருப்பத்துக்கு முதல் இடம் அளித்து, தன் காதலையே அழித்துக்கொள்ள முன்வந்த அவளுக்கு இப்போது தெய்வம் இரங்கிவந்து-இறங்கி வந்து ஒரு புதிய விடிவைக் காட்டியிருப்பது ஒர் அதிசயமாகவே இருந்தது. ‘என் வாழ்க்கைப் பாதையிலே மின்னலாய்த் தோன்றியவர் அன்டர் அம்பலவாணன். அவர் நினைவை நான் மறக்காமல் இருப்பது என் தர்மம். அவர் அன்பை மறக்காமல் இருப்பது என் கடமை. சுடர்க்கொடி பொன் வியாபாரியின் மகள், அதளுல்தான் அவளுக்கும் பொன்மனம் கைகூடி வந்திருக் கிறது போலும்! தங்கமான தோழி. இருவரையும் ஒரு நாளைக்கு அன்பர் மோகன்தாஸ் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டும். மகிழ்வார்!’

மனத்தில்தான் உயிர் உறைந்திருக்கிறது. திருட்டாந்தம்: அம்பலவாணன்-சுடர்க்கொடி. தன் இல்லத்தில் அவர்கள் இருவரும் வந்திருந்தபோது, முடிந்த முடிவாக, தான் சுடர்க்கொடியிடம் சொன்னதை நினைவு கூர்ந்தாள்: சகோதரி, உன் அத்தானை உன்னுடைய அத்தானகவே ஆக்கிக்கொள்ள முயற்சி செய்! முயன்றால் முடியும். இதுவே, நான் உன்னிடம் வேண்டும் வரம். இதுவே, நான் உனக்குச் செய்யவேண்டிய மனிதப் பண்பு மிக்க கடமையாக எனக்குத் தோன்றுகிறது. என் மனச் சாட்சி அப்போதுதான் என்னே வாழ்த்தும்!...” .

தா. ம. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/137&oldid=663942" இலிருந்து மீள்விக்கப்பட்டது