பக்கம்:தாய் மண்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

முயற்சிக்குக் கூலி கிடைத்தது!... “சின்ன ஐயாவோட நிலைமை ரொம்ப எக்குத்தப்பாப் போயிடுச்சு போன வாரம். அவரைப் பார்த்துப் பார்த்து அவரோட மாமன் மகள் சுடர்க்கொடியும் நோய்ப்பட்டுப் போச்சு. ரெண்டு பேருக்கும் மனநோய் தானுங்கம்மா காரணம்!... சுடர்க்கொடி அம்மாவோட நிலைமை ரொம்பவும் பயத்தை உண்டாக்கினதும், சின்ன ஐயா சின்னப்பிள்ளை பாட்டம் கதறித் துடிச்சிட்டாருங்க. கடைசியிலே, அவர் சுடர்க்கொடி அம்மா கையைப் பிடிச்சுக்கிட்டு, இனி நீ என்ளுேட சொத்து அப்புடின்னு சொன்னரோ, இல்லையோ, உடனேயே அந்தப் பொண்ணு மறுபிறப்பு எடுத்த மாதிரி தெளிஞ்சு வந்திடுச்சு. “இனிமே என் அத்தானுக்குப் பய மில்லை!” என்னு குதிச்சுது சுடர்க்கொடி!... இந்தக் கிழவிக்கு அவுங்க ரெண்டு பேர் கதையும் காரணமும் ஒரே அதிசயக் கூத்தாத்தான் இருக்குதுங்க!...’ என்று அந்தப் பங்களாவின் வேலைக்காரி வெளி வாசல் வரை வந்து பேசிய பேச்சு, தமிழரசியின் இதயத்தில் எதிரொலி பரப்பிக்கொண்டே யிருந்தது. -

இயந்திர மனிதர்களைப் பிடரியில் பற்றி நிறுத்தி, “இன்று நீங்கள் மனிதர்களாக வாழ வேண்டிய சுதினம். நீங்கள் யந்திரங்களுடன் “டு போட்டு விடவேண்டும்! என்று சொல்லாமல் சொல்லும் சாகஸம் இந்த ஞாயிற்றுக் கிழமை ஒன்றுக்குத்தான் உண்டு. இல்லையா?

அவள் வீடு செல்ல வேண்டும். பஸ்ஸை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். மோகன்தாஸ் அவள் கண்களுக்குள்ளே மாறி மாறி நின்றான்! “என் அன்பரிடம் தருணம் பார்த்து என் இதயக் கனவைச் சொல்லிவிட வேண்டும். அவர் எனக்கு நல்வாக்குத் தருவார்; என்னை வாழ்த்துவார். மதரின் நல்லாசி கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம். அதேபோல, அம்மையப் பனும் என் கடமையை வாழ்த்திவிட்டால், நான் பிறவிப் பயன் பெற்றவளாகி விடுவேன்! நினைவுக்கொழுந்துகள் மருக் கொழுந்துச் சரம் தொடுத்தன. வாடை உள்ளத்தை நிறைத்தது. வாடை உடலே உறுத்தியது. ‘என்னை ஆசீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/138&oldid=663943" இலிருந்து மீள்விக்கப்பட்டது