பக்கம்:தாய் மண்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

வதிக்க என் தாய் தந்தையும் இருந்திருந்தால்...? என்ற ஆசை வேரோடியபோது, அவள் மனம் பொங்கியது.

முன் நாள் காலையில் மோகன்தாஸைக் காணப் புறப் பட்டாள். அவர் தன்னுடைய பட்டாளத்துச் சிநேதிதர் ஒருவரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சந்திக்க டாக்ளி’ எடுத்துக்கொண்டு போயிருந்தார். அவரைப் பார்க்காமல் எப்படி இத்தனை மணிகள் ஒடிவிட்டன: சாந்தோம் இல்லத் துக்குப் புறப்படுவதற்கு முன்னதாக அவள் பார்வைக்கு இலக் கானது போட்டோ ஒன்று. பழைய ஆல்பத்திலிருந்தது. வித்தாரக் கதை சொல்லி, தனக்குக் குழந்தைப் பருவத்தில் அன்னம் பிசைந்துாட்டிய ஆயாளின் படம் அது. முதுமைக் கோலத்தையும் மறந்து அவள் தனக்காக எடுத்துக்கொண்ட சிரமங்களை அவள் சொல்லிக் கேட்டதுண்டு, தமிழரசி, அக் கிழவியைச் சில வருஷங்களுக்கு முன்னர் அவள் வழியில் சந்தித்தாள். அவள் சிரித்துக் கொண்டே தன்னை யார் என்று இனம் சொன்னதும்தான், தமிழரசிக்கு நினைவு வந்தது. கிழவியை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிட்ட வேண்டுமேயென்று கவலை கொள்ளலாள்ை.

மழை தூறியது.

பஸ் வரவில்லை. தமிழரசி ஒரு வீட்டின் வெளித் தாழ்வாரத்தில் ஒதுங் கிள்ை. அது ஒரு பள்ளிக்கூடம் என்று தெரிந்தது; வாத்தி யாரம்மாவுக்கு ஆபத்து உதவி செய்துவிட்டது.

“ஹல்லோ, தமிழரசி!” என்று அவள் சிநேகிதி ஸ்டெல்லா மேரி அவளைத் தோள்பற்றிக் கூப்பிட்டாள். கைப்பையை வலது தோளில் தொங்கவிட்டவாறு, ‘ஒ..., நீங்களா?’ என்று சொல்லி rேம லாபம் கேட்டாள், தமிழரசி.

இருவரும் உரையாடினர். அப்போது ஸ்டெல்லா சொன்ன ஒரு செய்தி அவளுக்குக் குலைநடுக்கத்தை உண்டு பண்ணியது. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/139&oldid=663944" இலிருந்து மீள்விக்கப்பட்டது