பக்கம்:தாய் மண்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தமிழரசிக்குச் சிரிப்பு பாளை வெடித்ததற்கு ஒப்ப வந்தது. இயல்பாவே உனக்குக் கைவந்திருக்கிற நகைச் சுவைப் பண்பு என் பேச்சை மடக்கக் கற்றுக் கொடுத்திட்டுது. சந்தோஷம், சகோதரி சரி, என் பேச்சை முடிச்சிடுறேன். அதாவது, உன்னுடை சூழல், தகுதி நிலைமை, மனம் எல்லாமே உனக்கு அனுசரணையாய் கூடியிருக்குது. ஆனபடி யாலே, உன் அப்பா இஷ்டப்பிரகாரமே உன் மனசைக் கவர்ந்திருக்கிற உன் அத்தானுடன் நீ உன் கல்யாணத்தை முடித்துக் கொள்: அதுதான் விவேகமும் கெட்டிக்காரத். தனமுமாகும்’ என்று தன்னுடைய இதயத்தைத் திறந்து பேசிஞள்.

அன்று ஒரு நாள் :

நேருஜி இல்லாத பாரதத்தில் நடந்த அந்த இரண்டா வது சுதந்திர நாள் விழாவை மன ஏக்கத்துடன் தரிசித்து, கால் நடையாகத் திரும்பிக் கொண்டிருந்தாள் தமிழரசி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடைவீதி நெடுகிலும் வந்து கொண்டிருந்தாள். அப்போது அவளைத் தொடர்ந்து வந்தாற்போல, சுடர்க்கொடியின் ரோஜப்பூ நிறக் கார் மறித்து நின்றது. உயிர்த்தோழிமார் இருவரும் அண்டி யிருந்த ஹோட்டலில் சாயா அருந்தினர்கள், பெண்கள் இருவர் சந்தித்தால், பேச்சுக்குத்தான தட்டுப்பாடு ஏற்படப் போகிறது? இருவரும் பேசினர்கள். அப்போது, சுடர்க் கொடியின் திருமண விஷயம் பேசப்பட்டதைத் தமிழரசி அறிவாள். ஆகவே, அதைப் பற்றிப் புலனறிய விரும்பினள். நையாண்டிப் பேச்சுக்கள் இருதரப்பிலிருந்தும் கிளம்பின.

“நட்பென்னும் நாடாச் சிறப்பை மதிப்பவர்கள் அவர் கள் ஆயிற்றே! -

அப்போது, தமிழரசியின் மணவினைபற்றிச் சுடர்க்கொடி அன்பான ஆதரவுடனும், தரவான நல்லெண்ணத் துடனும், நல்லெண்ணம் கொண்ட கவலையுடனும் எடுத்துச் சொன்ன அந்த நடப்பை இப்போது அவளுடைய அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/14&oldid=663945" இலிருந்து மீள்விக்கப்பட்டது