பக்கம்:தாய் மண்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

யாரோ ஒரு ரெளடி இந்த ஸ்டெல்லாவின் கற்பைக் களவாட எண்ணியிருக்கிருன். ஊரடங்கும் வேளை. வீட்டில் அவள் மாத்திரம்தான் இருந்தாள். பலநாள் இவள்மீது கழுகுக்கண் பார்வை வீசிக் காத்துக் கொண்டிருந்தவன் போல அந்தப் பாவி வந்திருக்கிருன். அழகாக உடுத் திருந்தான். பட்டுச்சட்டை பளபளத்தது. உடுப்புக்களில் மனிதகைவும், உள்ளத்து உணர்ச்சிகளில் மிருகமாகவும் அவன் இருந்தான். ஸ்டெல்லா மேரிக்கு ஒன்றும் ஒடவில்லை. அண்டை அயலில் வீடே இல்லை. சிலுவைக் குறியிட்டு ‘ஜபம் செய்தபடி, தவித்தாள். அதற்குள், வந்தவன் அவளை நெருங்கிவிட்டான். அப்போது, யாரோ ஒரு முகமதியப் பெரியவர் அங்கு வந்திருக்கிரு.ர். ஸ்டெல்லா வுக்குத் தெய்வத்தைக் கண்டதாகவே இருந்தது. தெய்வத் தின் ஆட்சிக்கருணை விநோதமாகவே தோன்றியது. அவள் விஷயத்தைச் சொன்னாள். வந்தவர் அந்தப் போக்கிரியை நையப் புடைத்தார். “இந்த மாதிரி இருக்கிற சமுதாயப் புல்லுருவிகளுக்குத் தெய்வம் பாடம் சொல்லித் தண்டனை கொடுக்கிறவரை விட்டு வைக்கப்படாது. கைக்கு மேலேயே பலன்களைச் சொல்விக் காட்டிப்பிட வேணும்’ என்று சொல்லி, அவனைச் சட்டத்தின் கைவிலங்குகளில் ஒப்படைத் தார். அவன் செல்வச் சீமான் ஒரு வ ரி ன் செல்லப் பிள்ளையாம்!

தோழி சொன்னதைக் கேட்ட தமிழரசிக்கு உதிரம் கொதித்தது. ‘நானுக இருந்திருந்தால், காந்திஜி சொன்னது போல, அந்தப் பாவியை என் நகங்களாலும் பற்களாலும் குதறி எறிந்திருப்பேன்’ என்று சூடு பறக்கச் செப்பினள்.

‘எனக்கு ஏற்றமாதிரி என் சி நே கி த ர் மிஸ்டர் ஆல்பர்ட்டை எனக்குத் துணையாக ஆக்கிக் கொள்ளப்போகி றேன்’ என்றாள் ஸ்டெல்லா மேரி.

“ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னுடைய கணவனின் நிழலில்தான் பூரணம் பெறுவதாகச் சொல்கிரு.ர்கள். உங்க ளுக்கு என் நல்வாழ்த்துக்கள்!” என்றாள் தமிழரசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/140&oldid=663946" இலிருந்து மீள்விக்கப்பட்டது