பக்கம்:தாய் மண்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

பஸ் வந்து நின்றது. ‘உங்க வருங்காலத்தைப் பற்றி என்ன முடிவு செஞ்சிருக் கீங்க?’ என்று நட்புறவில் அறிய விரும்பினுள், பாங்கி.

“உங்க மாதிரி நானும் எனக்கு ஏற்ற ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கப் போறேன். அதற்குச் சீக்கிரமே சந்தர்ப்பம் வாய்க்குமென்றுதான் எதிர்பார்க்கிறேன்.'”

‘அதுதான் கரெக்ட், டீச்சர்!... பெண் என்று சொன்னல், அவளுக்கு ஒரு காவல், துணை இருந்திருந்தால் தான் நல்லது. பெண்களிலே சில பேர் வாழ்க்கைப் பந்தத் திலே ஈடுபடாது, கன்னிகளாகவே இருந்திடுருங்க. எனக் கென்னவோ, அம்மாதிரியானவர்களைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகிறதில்லை. அவர்கள் போவி என்பது என்ளுேட வாதம்! ...’

இன்னும் என்னவோ. திருவாய் மலர அந்தக் கன்னி பிரயத்தனப்பட்டாள்.

அதற்குள், தமிழரசிக்குப் பொறுக்கவில்லை. “ஸ்டெல்லா! நீங்க ஒன்றிரண்டு பேர்களுடைய ஊழலை வைத்துக்கொண்டு ஒரு பொது அபிப்பிராயத்துக்கு வருவதானது தவருண முடி வாகும். மனசிலே ஊக்கம் இருந்தால் அப்புறம் வாழ்க்கை யிலே சாதிக்க முடியாதது எதுவுமே இல்லே! தன்னையே எரிச்சுக்கிட்டுப் பிறருக்கு வெளிச்சம் கொடுத்து, பிறருடைய சந்தோஷத்திலே மனச்சாந்தி அடைகிற மெழுகுவர்த்திக் குணம் கொண்ட நிதர்சன தெய்வங்களாக எத்தனையோ கன்னிமார்கள் இருக்கிறார்களே!... நீங்க சார்ந்திருக்கிற மதத்திலேயே என் பேச்சுக்கு ஆதாரம் ஏராளம் இருக் குதே!...” வர வர - வளர வளர கனல் பறந்தது. நாமெல் லாம் சமுதாயத்திலே ஒரு குறிப்பிட்ட அந்தஸ்திலே வைக்கப் பட்டிருக்கிறவங்க. நாம் சிந்தனையிலே - பேச்சிலே - செய்கையிலே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கத் தான் பாடுபட வேணும். இல்லையா, சகோதரி?’’ தமிழரசி சூடு பறந்திடப் பேசிளுள். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/141&oldid=663947" இலிருந்து மீள்விக்கப்பட்டது