பக்கம்:தாய் மண்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

உதிர்த்த திவினைச் சொற்களுக்குரிய அறுவடையைச் செய்துகொண்டு, ஸ்டெல்லா மேரி புறப்பட்டாள்.

புறப்பட்ட பஸ் வில் தமிழரசி புறப்பட்டாள்.

பிராட்வேயில் இறங்கிய தமிழரசி, அந்தச் சூழ்நிலைக்குத் தப்பிப் பிழைக்கக் கண்களில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு நடந்தாள். அப்போது, ஜலஜா எதிர்ப்பட்டாள். அவளு டன் கை கோத்துக்கொண்டு புதிய மைனர் ஒருவன் பீடு நடை போட்டுக்கொண்டு வந்தான். அந்தி மாலையில் அவன் மீசையும் கிருதாவும் எடுப்பாகத் திகழ்ந்தன. நாகரிகம் அவளிடமிருந்துதான் பிறக்கிறதென்கிற பா வ னை யி ல் ஜலஜா வேஷம் போட்டுக் கொண்டிருந்தாள். பாவம்! பரிதாபத்துக்குரிய சகோதரி. அவளைப் படைத்தவன்தான் அவளுக்கு மாணத்தின் அருமையைக் கற்பிக்க வேண்டும்!” என்று எண்ணியவளாக அவள் வழி தொடர்ந்த போது, ‘அம்மா ‘ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அது ஒரு சிறிய சந்து. சந்தடியில்லாத சந்து.

குமாரி ஜலஜாவுடன் தொடர்ந்த மீசைக்கார வாலிபன் ‘அம்மா’ என்று மீண்டும் தமிழரசியின் பக்கம் திரும்பி அழைத்தான். அவனது கண் பார்வையைத் தமிழரசி எடை போட்டாள். குரவின் நிலையை அவள் ஆராய்ந்தாள். அவள் உஷாராக ஆளுள். “என்னையா அழைச்சீங்க? என்ன வேணும்?’ என்று அவளுக்கே உரித்தான நெஞ்சுத் திடத்துடன்-திட்டவட்டமான அழுத்தத்துடன் அவள் நெருப்புப் பொறி பறக்க வினவிஞள். அவனுக்குத் தன்னி டம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என்ற ஆத்திரம் அவள் குரலுக்கு வேகம் பாய்ச்சியது.

‘அம்மா! நெருப்புக் கொஞ்சம் வேணும்!’ என்று கேட்டுக்கொண்டே, சிகரெட் கேளின் பொத்தானை அழுத்தி ஒரு சிகரெட்டை எடுத்து வைத்துக்கொண்டான், அவன்.

‘நெருப்பா? எங்கிட்ட ஏதுங்க?’ என்று முகத்தினிலே வெஞ்சினம் தெறிக்க எதிர்வின விடுத்தாள். அவள் உதடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்_மண்.pdf/142&oldid=663948" இலிருந்து மீள்விக்கப்பட்டது